உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

புருஷன் கிடைக்கவில்லையா? போயும் போயும் இந்தக் கிழவனுக்குத் தானா இவளைக் கயாணம் செய்துவைக்க வேண்டும் . முன் பிறப்பில் இவள் என்ன பாவம் செய்தாளோ? இந்தப் பிறப்பில் இந்தக் கிழட்டுப் பிராமண னுக்கு வாழ்க்கைப்பட்டாள். கிழவனுடன் இளம் பெண் மகிழ்ச்சியாக வாழமுடியுமா? அம்பு தைத்தாலும், ஈட்டி குத்தினாலும் பொறுத்துக் கொள்ளலாம். கிழப் புருஷனின் முகத்தைப் பார்க்கவும் சகிக்க முடியாதே! இன்பமும், மகிழ்ச்சியும், சுக வாழ்க்கையும் கிழப் புருஷனிடம் எப்படிக் கிடைக்கும்?” என்று இப்படியெல்லாம் அவளைப் பற்றி பேசி வம்பளந்தார்கள்.

பார்ப்பனப் பெண்களின் சுடுமொழிகளைக் கேட்ட அமித்ததா வனை, மனம் வெதும்பினாள். அவள் அழுது கொண்டே நீர்க்குடத் துடன் வீட்டுக்கு வந்தாள். “என்ன இது? ஏன் அழுகிறாய்?” என்று ஜூஜூகன் வினவினான்.

66

"இனி நான் ஜலம் கொண்டுவரப் போகமாட்டேன். அவர்கள், கிழப்பிராமணனைக் கலியாணம் செய்து கொண்டேன் என்று பரிகாசம் செய்கிறார்கள்.

“நீ போக வேண்டாம். நான் போய் ஜலம் கொண்டு வருகிறேன்.

66

"நன்னா இருக்கு. நீங்கள் போய் ஜலம் கொண்டு வருவதா? இது என்ன வழக்கம்? இப்படி எல்லாம் செய்தால் நான் இங்கு இருக்க மாட்டேன். எங்கேயாவது போய்விடுவேன். ஜலம் கொண்டு வரவும், கடைக்குப் போய்வரவும் ஒரு ஆளை அமர்த்துங்கள்.’

"வேலைக்கு ஆள் வைக்க என்னிடம் காசு ஏது? நானே போய் ஜலம் கொண்டு வருகிறேன். நீர் வெளியே போக வேண்டாம்.’

"வங்கமலைக் காட்டிலே வெசந்தர ராஜா என்று ஒருத்தர் இருக்கிறாராமே? அவரிடம் போய்க்கேட்டால், கேட்ட பொருளைத் தானம் கொடுக்கிறாராம். அவரிடம் போய், வேலை செய்ய ஒருஅடிமை ஆளைத் தானங்கேட்டு வாங்கி வாருங்களேன்.

"வங்கமலைக்காடு எங்கே இருக்கிறது! நான் எங்கே இருக் கிறேன்? இந்த வயசிலே அவ்வளவு தூரம் நான் போகமுடியுமா? அது முடியாத காரியம். உனக்கென்ன, நான்போய் ஜலம் கொண்டு வருகிறேன்.

66

,,

"ஓய், பிராமணா, நீர் போய் ஜலம் கொண்டுவந்தால் அவர்கள் எல்லோரும் கே பேசுவார்கள். வீட்டு வேலை செய்ய ஒரு

ளை