உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

66

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 11

'அம்மா நலமாக இருக்கிறார்களா? எங்களைப்பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருப்பார்கள். நாட்டில் எல்லோரும் சுகம்தானே?" என்று வெசந்தரகுமாரன் கேட்டார்.

இவ்வாறு இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அரசியார், இதற்குள்ளாக இவர்கள் மன அமைதி பெற்றிருப்பார்கள் என்பதை அறிந்து, பரிவாரங்களுடன் அங்கு வந்தார். அரசி யாரைக் கண்டவுடன் விரைந்துசென்று வரவேற்று மத்தியும் இளவரசனும் காலில் விழுந்து வணங்கினார்கள். சற்று நேரங் கழித்து ஜாலியும் கண்ணாவும் அங்கு வந்தார்கள். அவர்களைக் கண்ட மத்தி, கன்றைப் பிரிந்த பசு மீண்டும் கன்றைக் கண்டது போல ஆவலுடன் தழுவி முத்தமிட்டு மகிழ்ந்தாள். இவ்வாறு அரச குடும்பத்தினர் எல்லோரும் ஒன்று சேர்ந்து மகிழ்ந்தனர்.

நாட்டிலிருந்து வந்த ஜனத் தலைவர்கள், வெசந்தர குமாரனை நாட்டுக்கு வரும்படி அழைத்தார்கள். சஞ்சய மன்னனும், நாட்டுக்கு வந்து அரசாட்சியை ஏற்றுக் கொள்ளும் படி கூறினார். “தாங்கள் எல்லோரும் சேர்ந்துதானே என்னைக் காட்டுக்கு அனுப்பினீர்கள்?” என்று கேட்டார் இளவரசன்.

66

“நாட்டு மக்களின் பேச்சைக்கேட்டு நானும் தவறு இழைத்து விட்டேன். தவற்றை உணர்ந்து இப்போது அழைக்கிறோம். நாட்டுக்கு வருக” என்று கூறினார் மன்னர் பெருமான்.

அவ்விடத்திலேயே அரச குமரனுக்குக் குடமுழுக்காட்டிப் பட்டங் கட்ட ஏற்பாடு செய்தனர். இளவரசனும் மத்தியும் மரவுரி ஆடையைக் கழற்றிவிட்டு, பட்டாடையணிந்து வந்தனர். அங்கிருந்த பெரிய கற்பாறையின்மேல் அவர்களை அமரச்செய்து குடங்களில் நீரைக் கொண்டுவந்து அபிஷேகம் செய்து நீராட்டிப் பட்டங் கட்டினார்கள். இராணியார் அனுப்பிய பட்டாடைகளை அணிந்து, அழகுடன் பொலிந்து காணப்பட்டனர். அவர்களை யானையின்மேல் அமரச் செய்து எல்லோரும் பாசறைக்குச் சென்றார்கள். பாசறைக்குச் சென்று அங்கே எல்லோரும் சிலநாள் தங்கியிருந்து, காட்டில் உள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்திருந்தார்கள். இவ்வாறு சில நாட்கள் இருந்த பிறகு எல்லோரும் புறப்பட்டு நாட்டுக்குச் சென்றார்கள். ஜேதுத்த நகரத்தைத் தோரணங்களினாலும் வாழை முகடு முதலியவைகளினாலும் அலங்கரித்து, நாட்டு மக்கள் இளவரசரையும் இளவரசியையும் வரவேற்று மகிழ்ந்து விழாக்கொண்டாடினார்கள்.