உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

169

வெசந்தர குமாரன் ஜேதுத்தர நகரத்திலே சிம்மாசனம் ஏறி அரசாண்டார். நீதி தவறாமல் செங்கோல் செலுத்தினார். முன்போலவே, நாள்தோறும் தான தருமங்களைச் செய்து கொண்டிருந்தார். இந்திரன், நாட்டிலே மழை பெய்வித்து, செழிப்பாக்கிச் செல்வம் பெருகும்படி செய்தான். அச்செல்வங் களைத் தகுந்த ஏழை எளியவருக்குத் தானம் செய்து வெசந்தர மன்னர் வாழ்ந்துவந்தார்.

இக்கதையைக் கூறியபிறகு பகவன் புத்தர் இவ்வாறு அடை யாளங் கூறினார்: "தேவதத்தன் ஜூஜூகப் பார்ப்பனனாகவும், சிஞ்சா அமித்தாபன்னியாகவும், சன்னன் சேத புத்திரராகவும், சாரிபுத்தர் அச்சுத முனிவராகவும், அநுருத்தர் சக்கனாகவும், சுத்தோதன மன்னர் சஞ்சய அரசனாகவும், மகாமாயா தேவியார் பூசதி ராணியாகவும், இராகுலன் தாயார் மத்தி இளவரசியாகவும், இராகுலன் ஜாலியாகவும், உப்பலவன்னை கண்ணாஜினாவாகவும், ததாகதர் வெசந்தர குமாரனாகவும் அப்பிறப்பில் இருந்தோம்” என்று விளக்கிச் சொன்னார்.

66

வண்டுளங்கொள் பூங்குழலாள் காதலனே உன்றன்

மக்களைத் தாசத்தொழிற்கு மற்றொத்தர் இல்லென்று எண்டுளங்கச் சிந்தையளோர் பார்ப்பனத்தி மூர்க்கன் இரத்தலுமே நீர்கொடுத்தீர் கொடுத்தலுமத் தீயோன்

கண்டுளங்க நும்முகம்பே ஆங்கவர்கள் தம்மைக் கடக்கொடியாலே புடைத்துக் கானகலும் போது மண்டுளங்கிற்று எங்ஙனே நீர்துளங்க விட்டீர் மனந்துளங்கு மால் எங்கள் வானோர் பிரானே!

  • * *