உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

21

பொழுது சாய்ந்தபோது தம்பியும் தங்கையும் பழங்களைப் பறித்துக்கொண்டு வந்தார்கள். அவர்களைத் தூரத்தில் கண்ட வுடனே இராம பண்டிதர் தமக்குள் இவ்வாறு எண்ணினார். அவர்கள் இளைஞர்கள்; என்னைப்போன்று அறிவு விளக்கம் அவர்கள் இன்னும் பெறவில்லை. தந்தையார் இறந்த செய்தியை அவர்களுக்குத் திடீ ரென்று கூறினால், வருத்தந் தாங்கமுடியாமல். அவர்களின் இருதயம் வெடித்தாலும் வெடித்துவிடும்.அவர்களை அதோ அந்தக் குளத்துக்கு அனுப்பிப் பிறகு மெல்ல செய்தியைக் கூற வேண்டும்.' இவ்வாறு தமக்குள் எண்ணிய இராமபண்டிதர், அவர்கள் அருகில் வந்தவுடனே, அவர்களிடம் சினங்கொண்ட வரைப் போலக் கூறினார்: "நீங்கள் நேரங் கழித்து வந்தீர்கள். நீங்கள் குளத்தருகில்போய் நில்லுங்கள். அதுதான் உங்களுக்குத் தண்டனை." தம்பியும் தங்கையும் அவர் கூறியபடியே குளத்தருகில்போய் நின்றார்கள். அப்போது இராமபண்டிதர், "நமது தந்தையார் அரசர் பெருமான்

இறந்துவிட்டதாகப் பரதன் கூறுகிறான்” என்று அவர்களிடம் சொன்னார். இச்செய்தியைக் கேட்டு அவர்கள் மயங்கி மூர்ச்சையடைந்து நீரிலே விழுந்தார்கள். இரண்டாவது முறையும் இச்செய்தியைக் கூறினார். மறுபடியும் அவர்கள் மூர்ச்சையடைந்து விழுந்தார்கள். மூன்றாவது தடவையும் கூறினார். அப்போதும் மூர்ச்சை யடைந்து விழுந்தார்கள். அப்போது, அமைச்சர்கள், அவர்களைத் தூக்கிவந்து கரையில் கிடத்தினார்கள். மூர்ச்சை தெளிந்து எழுந்தபோது எல்லோரும் அழுது புலம்பி வருத்தம் அடைந்தார்கள்.

அப்போது பரத குமரன் தனக்குள் இவ்வாறு எண்ணினான்: அண்ணன் இலக்கணனும், தமக்கை சீதையும், தந்தை காலமான செய்தியைக் கேட்டு வருத்தம் தாங்க மாட்டாமல் மூர்ச்சித்து விழுந்தார்கள்; அழுது புலம்பினார்கள். ஆனால், இராம பண்டிதர் மட்டும் வருந்தவும் இல்லை, அழவும் இல்லை. அவர் வருத்தம் அடையாத காரணம் தெரியவில்லை. இதைக்கேட்டு அறிய வேண்டும்.' இவ்வாறு எண்ணிய பரத குமரன், இராம பண்டிதரிடம் இவ்வாறு கூறினான்: “தகப்பனார் காலமானார் என்று கேட்டவுடன், துயரம் அடையவேண்டிய நீர், மனம் வருந்தாமல் இருந்த காரணம் என்ன?

இதைக்கேட்ட இராமன், தான் ஏன் மனக்கவலைப் படவில்லை என்பதற்கு இந்தக் காரணத்தைக் கூறினார்: