உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

81

அவர்கள் முறையீட்டைக் கேட்டார். ஆட்கள் செய்தியைக் கூறினார்கள்.

அரசர் பெருமான் இரண்டு பேரையும் அழைப்பித்து விசாரணை செய்தார். “நீர் நாற்பதுகோடி பொன்னைப் பிலியனுக்குக் கொடுத்து உதவியது உண்மைதானா?” என்று அரசர் பெருமான் கேட்டார்.

66

ஆம், பெருமானடிகளே! பிலியன் வறுமையடைந்து என்னிடம் வந்தபோது நாற்பதுகோடி பொன்னைக் கொடுத்தது உண்மைதான். அது மட்டுமல்ல, என்னிடமிருந்த நிலபுலங்கள், ஆடுமாடுகள், அடிமை யாட்கள் இவைகள் எல்லாவற்றிலும் செம்பாதி பங்கிட்டுக் கொடுத்தேன்."

"

"இவர் கூறுவது உண்மைதானா?" என்று பிலியனை நோக்கி வினவினார் அரசர் பெருமான்.

"ஆம். உண்மைதான் பெருமானடிகளே!” என்று விடை யளித்தான் பிலியன்.

“உமக்கு இவ்வளவு பொருளைக் கொடுத்து உதவிய இவ் வள்ளல் வறுமையடைந்து உம்மிடம் வந்தபோது என்ன கொடுத்தீர்?” என்று அரசர் பெருமான் கேட்டார்.

66

பிலியன் வாய்பேசாமல் வாளா இருந்தான்.

'அரைப்படி அரிசியை அவருக்குக் கொடுத்தீரா?" பிலியன் இக் கேள்விக்கு விடைகூறாமல் மௌனமாக இருந்தான். அரசர் பெருமான் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து, பிலியனுடைய முழுச் செல்வத்தையும் போதிசத்துவருக்குக் கொடுக்கும்படி தீர்ப்புச் செய்தார். இத்தீர்ப்பை நிறைவேற்றி வைக்கும்படி அமைச்சர்களுக்கு ஆணை யிட்டார்.

அப்போது போதிசத்துவர் கூறினார்: “பெருமானே! பிலியனுடைய செல்வம் முழுவதும் எனக்கு வேண்டாம். நான் அவ ருக்குக் கொடுத்த நாற்பது கோடிப் பொன்னையும், அடிமை களையும் கொடுத்தால் போதும். அரசரும் அவ்வாறே ஆணை கொடுத்தார். போதிசத்துவர், தமது செல்வத்தையும், அடிமை களையும் பெற்றுக்கொண்டு இராஜ கிருக நகரம் வந்து சிறப்பாக வாழ்ந்தார். தான தருமங்களையும் செய்து கொண்டிருந்தார்.

இக்கதையைக் கூறியபிறகு, பகவன் புத்தர், “அப்பிறப்பில் தேவதத்தன் பிலியனாகவும், ததாகதர் போதிசத்துவராகவும் இருந்தோம்" என்று ஒப்புமை கூறினார்.