உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சிவி ஜாதகம்

பகவன் புத்தர் ஜேதவன ஆராமத்தில் இருந்தபோது, இணையற்ற கொடை' என்பது பற்றி இந்தக் கதையைக் கூறினார். (இந்தச் சந்தர்ப்பம் கோவீர ஜாதகத்திலும் கூறப்பட் டுள்ளது.) அரசன் ஏழாம் நாள் பிக்குச் சங்கத்துக்கு வேண்டிய வற்றையெல்லாம் கொடுத்து வாழ்த்துரை கூறும்படிக் கேட்டான். ஆனால், பகவர் வாழ்த்துரை கூறாமலே போய் விட்டார். அடுத்த நாள் காலையில் அரசர் உணவு அருந்தியபின் விகாரைக்குச் சென்று பகவரைத் தொழுது, வாழ்த்துக் கூறாததற்குக் காரணம் கேட்டார். பகவன், மக்கள் தூய மனத்துடன் இல்லாதது பற்றி வாழ்த்துரை வழங்கவில்லை என்று காரணங்காட்டிய பிறகு, பேராசைக் காரர்கள் மறுமையில் நல்லுலகம் அடைய மாட்டார்கள் என்பது பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதனைக் கேட்ட அரசன் பெரிதும் மகிழ்ச்சி யடைந்து ஆயிரம் பொன் விலை யுள்ள சிவி அரச ஆடையொன்றை நன்கொடை கொடுத்து அரண் மனைக்குச் சென்றான்.

66

அடுத்தநாள் பிக்குகள் இதைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். 'அரசர் பெருமான் இணையற்ற நன்கொடை வழங்கியதோடு அல்லாமல், இன்றும் தசபலரின் அறவுரைகளைக் கேட்டு மகிழ்ந்து ஆயிரம் பொன் மதிப்புள்ள சிவி ஆடையையும் ஈந்தார். தானம் செய்வதில் அரசர் மனம் சப்பதில்லை” என்று புகழ்ந்து பேசினார்கள். அப்போது அவ்விடம் வந்த பகவர், அவர்கள் எதைப்பற்றிப் பேசுகிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்குச்சொன்னார்: “பிக்குகளே! புறப்பொருள்க ளாகிய பொன்னையும் பொருளையும் தானம் வழங்குவது எளிதுதான். பண்டைக் காலத்திலே பரதகண்டம் முழுவதும் புகழ் பரப்பி நாள் தோறும் ஆறு கோடி பொன்தானம் வழங்கிய கொடை வள்ளல், புறப் பொருள்களைக் கொடுப்பதனால் மனநிறைவு அடையாமல், அக உறுப் பாகிய தனது கண்ணையும் பிடுங்கித் தானமாக வழங்கினார்” என்று கூறி இக்கதையைச் சொன்னார்:

முற்காலத்திலே சிவி என்னும் பெயருள்ள அரசன், அரிட்டபுரம் என்னும் நகரத்திலிருந்து சிவி நாட்டை அரசாண்டு வந்தான். அந்த அரசனுக்குப் போதிசத்துவர் மகனாகப் பிறந்தார். அந்தக் குழந்தைக்கும்