உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

91

கூடியிருந்தபடியினாலே அவர்களுக்கு அறத்தின் பெருமையைக் கூற இதை வாய்ப்பாகக் கொள்ள அரசர் எண்ணினார். அவர், சிம்மாசனத் தில் அமர்ந்து இவ்வாறு அறிவுரையைக் கூறினார்.

66

"வறியவர் வந்து இரந்து கேட்டால் கொடுக்கக்கூடிய நிலையில் இருந்தும் 'இல்லை' என்று கூறுபவர், எனக்குக் கிடைத்துள்ள தெய்வீகப் பார்வையைக் கண்டாவது தானம் செய்வார்களாக.

“தமக்கென வாழாமல் பிறருக்காக வாழ்கிறவர் மனிதரில் மேலானவர். நான் என்னுடைய ஊனக் கண்ணைக் கொடுத்தேன். ஆனால், உயர்ந்த ஞானக்கண்ணைப் பெற்றேன்."

“அன்பர்களே! ஏழைகளுக்குக் கொடுத்து நீங்களும் உண்ணுங்கள். அவரவர்களால் இயன்றவரையில் அறஞ்செய்து வாழுங்கள். அறத்தை மறவாதீர்கள். இம்மையில் அறஞ் செய்தோர் மறுமையில் மேலுலகம் அடைவர்.’

இவ்வாறு அரசர் பெருமான் மக்களுக்கு அறவுரை வழங்கி னார். உவா நாட்களில் இவ்வாறே மக்களுக்கு அறவுரை வழங்கி னார். இவ் வறவுரையைக் கேட்ட மக்கள், தங்களால் இயன்ற வரையில் தான தருமம் செய்து கொண்டு உலகத்தில் வாழ்ந்து மறுமையில் நற்கதி பெற்றார்கள்.

இக்கதையைக் கூறியபின்னர் பகவன் புத்தர் கூறினார்: “பிக்கு களே! அறிஞர்கள் பண்டைக் காலத்திலே பொன்னையும் பொருளை யும் ஊனையும் உணவையும் தானம் வழங்கியது மட்டும் அல்லாமல், தங்கள் முகத்தில் இருந்த கண்களையுங் கூடத் தானம் வழங்கினார்கள்.” இவ்வாறு கூறிய பின்னர் பகவர் “அந்தக் காலத்தில் ஆனந்தர் சீவகன் என்னும் மருத்துவராகவும், அநுருத்தர் சக்கனாகவும், புத்தர் போதனையைப் பின்பற்றி நடப்பவர்கள் நாட்டு மக்களாகவும், ததாகதர் சிவி அரசனாகவும் இருந்தோம்” என்று முற்பிறப்பு ஒப்புமை கூறினார்.

66

"விண்ணவர் நாயகன் வேண்டக் கண்இனி தளித்த காதற்

புண்ணியன் இருந்த போதி

நண்ணிட நோய் நலியாவே.'