உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. உம்மாதந்தி ஜாதகம்

ஜேதவன ஆராமத்தில் பகவன் புத்தர் தங்கியிருந்த போது, துறவறத்திலிருந்து வழுக்கிய ஒரு பிக்குவின் பொருட்டு இக் கதையைக் கூறினார். இந்தப் பிக்கு சாவத்தி நகரத்திலே ஐயம் ஏற்கச் சென்றபோது, துணிமணிகளை நன்கு அணிந்த கட்டழ குடைய கவர்ச்சிகரமான ஒருத்தியைக் கண்டு காதல் கொண்டார். தமது விகாரைக்குத் திரும்பி வந்த பிறகும், அந்த அழகியின் நினைவை மாற்றமுடியாமல், அவளையே நினைத்து நினைத்து மனம் உருகினார். இவ்வாறு ஏங்கி எதிலும் மனம் செல்லாமல் உடல் மெந்து இளைத்துப் போனார்.

இதனை அறிந்த ஏனைய பிக்குகள் அவரைக் கேட்டார்கள். "ஐயா, முன்பெல்லாம் நீர் மன அமைதியுடன் கவலையற்று இருந்தீர்கள். இப்போது அப்படி இராதது ஏன்?" இதற்கு அவர், “எனக்கு எதிலும் மனம் செல்லவில்லை” என்று விடையளித்தார். அவர்கள் கூறினார்கள்:

66

சையே பிறவித் துன்பத்திற்குக் காரணம் என்பதை அறிந்து, பிறவா நிலையை யடைவதற்காக நீர் உற்றார் உறவினரை விட்டுத் துறவு பூண்டீர். துறவுபூண்ட பிறகும் நீர் ஆசைக்கு இடந்தருகின்றீர். ஆசையே பெருந்துன்பத் திற்குக் காரணம் என்பதை அறியீரா?" என்று அவருக்கு அறிவுரை புகட்டினார்கள். இவ்வுரைகளைக் கேட்டபிறகும் பிக்கு திருந்தவில்லை. அப்போது, பிக்குகள் பகவன் புத்தரிடம் அவரை அழைத்து வந்து, இவர் நிலைமையை அவருக்குக் கூறினார்கள்.

66

பகவன் புத்தர், அவர்கள் கூறுவது உண்மைதானா என்று கேட்டார். பிக்கு, ஆம் என்று ஒப்புக்கொண்டார். அப்போது, பகவர், "பிக்குகளே! முற்காலத்திலே நல்லறிவு வாய்ந்த மெய் யறிஞர் அரசாட்சியை நடத்தும் பொறுப்பு வாய்ந்திருந்தும், தமது உள்ளத்திலே காம இச்சை புகுந்து அலைக்கழித்தபோது, சிறிது காலம் அவ்விச்சை யினாலே மனம் வருந்திப் பின்னர் அந்த எண்ணத்தை நீக்கி நல்லறிவு பெற்றனர்” என்று சொல்லி இக்கதையைக் கூறினார்:

முன்னொரு காலத்தில் சிவி நாட்டின் தலைநகரமாகிய அரிட்ட புரத்திலே சிவி என்னும் பெயருள்ள அரசன் அரசாண்டார். அக் காலத்தில்