உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

முதற் பதிப்பின் பதிப்புரை

‘வடமொழி தென்மொழி என்னும் இரண்டு மொழிகளையும் நெடுங்காலம் பாடுபட்டுச்சீராக்கி அமிழ்தினும் இனிய சுவையும், ஆழ்ந்த கருத்தும், தெளிவும், தண்ணிய ஒழுக்கமும் குடிகொண்டு விளங்கும் மேன்மையுடையதாக்கி அவைகளிற் பல காவியங்களையும் நீதி நூல்களையும் சய்து வைத்தவர்கள் ஜைன சமயப் பேரறிஞர்களேயாவர்” என, யசோதர காவியத்தை முதன் முதலில் பதிப்பித்த தில்லையம்பூதூர் உயர்திரு. வெங்கடராம அய்யங் கார் அவர்கள் அக்காவியத்தின் முகவுரையில் புகழ்ந்துள்ளார்கள்.

உண்மையில் ஜைனப் பேரறிஞர்கள் உலகம் உய்ய வேண்டி காலைப்பொழுதும் மாலைப் பொழுதும் கல்விப் பொருளே செல்வப் பொருளாய்க் கொண்டு அறிவுக்கலைகளை, அன்பு நெறிகளை ஆர்வத்தோடு வளர்த்துள்ளனர். அதுமட்டுமன்று! அத்தகைய அறிவுக் கலைகளில் தோன்றும் கருத்துக்களையும் வரலாற்றுச் செய்திகளையும் கல்லிலேயும் செதுக்கி வைத்தனர். ஓவியங்களின் வாயிலாகவும் தீட்டி வைத்தனர். இவ்வுண்மைகளை இந்தியா முழுவதுங் காணப்படும் மலைகள், குகைகள், கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் முதலிய வற்றால் அறியலாம். அவற்றினுள் ஒன்றே நமது மாமல்லபுரத்துச் சிற்பக்கலை.

وو

இச்சிற்பங்களின் உண்மை வரலாறுகளை அறிந்தோ அறியா மலோ அச்சிற்பங்களை “அர்ச்சுனன் தவம்" என்றும் “பகீரதன் தவம் என்றும் பலவாறாக எழுதி வெளியிட்டுள்ளனர். ஆனால் மாமல்லபுரச் சிற்பங்களை நேரே சென்று பார்த்தால் ஏதோ சமயவெறி இங்கு நடனம்புரிந்துள்ளதென்பதை ஆங்காங்குள்ள சிறு சிறு கோயில்களின் மத்தியில் உள்ள உருவங்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ள வற்றினின்றும் தெளிவாகும். காய்தல் உவத்தலின்றி நடுநிலைமை யோடு ஆராயும் புலவர்களும், கல்வெட்டு நிபுணர்களும், புதை பொருள் ஆராய்ச்சியாளர்களும், வரலாற்றுப் பேராசிரியர்களும் இந்த நாட்டிற்குத் தேவை தேவை யென்பதை அங்கே அழிக்கப்