உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

முதலிய இடங்களில் குகைக் கோயில்களையும்

கோயில்களையும் பாறைகளில் அமைத்தார்கள்.

“இரதக்”

கருங்கற் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட இக்குகைக் கோயில்களில், மரத்தில் செய்யப்பட்ட மரவேலை போன்ற சில அமைப்புகள் காணப்படுகின்றன. இந்த அமைப்புகள், பண்டைக் காலத்தில் மரங்களினால் கோயில்கள் கட்டப்பட்டன என்பதைக் காட்டுகின்றன.

கற்றளிகள்

கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரசாண்ட இரண்டாம் நரசிம்மவர்மன் ஆன இராஜசிம்மன் காலத்தில் கற்றளி அமைக்கும் முறை ஏற்பட்டது. கற்றளி என்றால் கற்கோயில் என்பது பொருள். கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கோயில் கட்டிடங்களுக்குக் கற்றளி என்பது பெயர். சுண்ணம் சேர்க்காமலே இக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன.

மகாபலிபுரத்தில் கடற்கரையோரமாக உள்ள கற்றளியும் காஞ்சீபுரத்தில் கயிலாசநாதர் கோயில் என்று இப்போது பெயர் வழங்கப்படும் இராஜசிம்மேச்சரம் என்னும் கற்றளியும் பனமலை என்னும் ஊரிலுள்ள கற்கோயிலும் முதன் முதல் அமைக்கப்பட்ட கற்றளிகளாகும். இக் கற்றளிகள் உண்டாக்கப்பட்டு ஏறக்குறைய 1200 ஆண்டுகளாகியும் அவை இப்போதும் உள்ளன.

செங்கற் கோயில்களைவிட கற்றளிகள் பல காலம் நிலை நிற்பவை. ஆகையினாலே, கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் தொடக்கத் திலிருந்து பல அரசர்கள் கட்டியகோயில்களில் பெரும்பாலனவும் கற்றளிகளே. கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சோழர்கள் பல்லவ அரசரை வென்று சிறப்படைந்தார்கள். இச் சோழர்களுக்குப் பிற்காலச் சோழர் என்பது பெயர். இச் சோழர்கள் புதிதாகப் பல கோயில்களைக் கற்றளியாகக் கட்டினார்கள். மேலும், பழைய செங்கற் கட்டிடக் கோயில்களை இடித்துவிட்டு அக்கோயில்களைக் கற்றளியாகக் கட்டினார்கள். இச் செய்திகள் நாம் சாசனங்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.