உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இந்தக் குகைக்கோயிலின் அமைப்பு, மண்டகப்பட்டு குகைக் கோயிலின் அமைப்பை ஒத்திருக்கிறது. பல்லாவரத்துக் குகைக் கோயிலில் துவாரபாலகர் உருவம் முதலிய ஒன்றும் கிடையாது. முன்பக்கத்தில் மண்டபமும் மண்ட பத்திற்குள் ஐந்து திருநிலையறை களும் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. கர்ப்பக் கிருகத்திற்குள் உருவங்கள் ஒன்றும் இல்லை.

இக்குகையின் முன் மண்டபம் 32 அடி நீளமும் 121/2 அடி அகலமும் 9 அடி உயரமும் உள்ளது. மண்டபத்தை இரண்டு வரிசைத் தூண்கள் தாங்குகின்றன. ஒவ்வொரு வரிசையிலும் நான்கு தூண்கள் உள்ளன. மண்டபத்தின் பின்புறத்தில் உள்ள ஐந்து கரு ப்பக்

பல்லாவரத்துக் குகைக்கோயிலின் தயமைப்பு.

கிருகங்களும் 21/2 அடிச் கதுரமாக அமைந்த மாடங்கள்போல் உள்ளன. மண்டபத்தின் மேற்புறப் பாறையிலும் உட்புறத் தூண்களிலும் பல்லவக் கிரந்த எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை மகேந்திர விக்ரமவர்மனின் சிறப்புப் பெயர்களாக உள்ளன. இந்தப் பெயர்களில் முதல் முதலாகத் தொடங்குவது “ஸ்ரீ மகேந்திர விக்ரமன்” என்பது. இதைப்போலவே திருச்சி குகைக்கோயிலிலும் இந்த அரசனுடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ளது கருதத்தக்கது.

ஸ்ரீ மகேந்திரவிக்ரமன், மத்தவிலாசன், சேத்தகாரி, விசித்திர சித்தன், பகாப்பிடுகு, லலிதாங்குரன், சித்ரகாரப் புலி என்னும் பெயர்கள் ச்சாசனத்தில் காணப்படுகின்றன. இப் பெயர்கள் மகேந்திர வர்மனுடைய விருதுப்பெயர்கள் ஆகும்.