உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

3. வல்லத்துக் குகைக்கோயில்

209

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா செங்கல் பட்டுக்கு ஒன்றரை மைல் தூரத்தில், திருக்கழுக்குன்றத்துக்குப் போகிற சாலையில் வல்லம் கிராமம் இருக்கிறது. “களத்தூர்க் கோட்டத்து வல்லநாட்டு வல்லம்” என்று இவ்வூர், பழைய சாசனங்களில் கூறப் படுகிறது.

இவ்வூர்க் குன்றின்மேல் பாறையிலே மூன்று குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு குகைகள் முற்றுப்பெற வில்லை. நன்றாக அமைக்கப்பட்டது மூன்றாவது குகைக்கோயில். இது சிவன் கோயில். இக்கோயிலுக்குத் திருவயந்தீசுவரமுடைய நாயனார் கோயில் என்பது பெயர். இந்நாட்டை, மகேந்திரவர்மன் காலத்தில், அவன் கீழ்ச் சிற்றரசனாக இருந்து அரசாண்ட வயந்தப் பிரியன் என்னும் அரசன் பெயரால் இக்குகைக்கோயில் அமைக்கப் பட்டபடியினால் இக்கோயிலுக்கு இப்பெயர் வந்தது.

வல்லம் குகைக்கோயிலின் தரையமைப்பு

இக்கோயிலில் இன்றும் பூசை வழிபாடுகள் நடை பெறுகின்றன. இக்கோயிலின் முன் மண்டபத்தைப் பிற்காலத்தில் செங்கல் சுவர் எழுப்பி அடைத்துவிட்டார்கள். இதனால், இக் கோயிலின் பார்வையும் அழகும் கெட்டுவிட்டன.

திருநிலையறையின்

வாயிற்புறத்தில்

வழக்கம்போலத்

துவாரபாலகர் உருவங்கள் உள்ளன. துவாரபாலகர்களின் உருவ அமைப்பும் தூண்களின் உருவ அமைப்பும் மகேந்திரவர்மன் காலத்து

அமைப்பையே ஒத்திருக்கின்றன.