உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

பழைய சிற்ப உருவங்களில் கலையழகு காணப்படும். புதிய சிற்ப வேலைகளில் மட்டமான கலையழகு காணப்படுகிறது. இது மற்றொரு குறைபாடாகும்.

கோயில் அதிகாரிகள், கோயில்களில் இருக்கும் பழைய தூண்கள், சிற்ப உருவங்கள் முதலிய கற்களை, அவை பின்னப்பட்டு உடைந்துபோன காரணத்தினாலோ அல்லது அவை உதவாதவை என்னும் காரணத்தினாலோ, புறக்கணித்து எறிந்துவிடுகிறார்கள். இப்படிச் செய்வது பெருந்தவறு. பின்னம் அடைந்த அல்லது வேண்டியிராத சிற்பங்களை எறிந்துவிடக்கூடாது. அவற்றைப் பொதுமக்கள் பார்க்கத்தக்க இடத்தில் பத்திரப்படுத்த வேண்டும். அவையும் கலைச் செல்வங்களாகப் போற்றப்பட வேண்டும். சிலர் அத்தகைய கற்களைத் தனிப்பட்டவர்களுக்கு விற்றுவிடுகிறார்கள். இவ்வழக்கத்தையும் அரசாங்கத்தார் கவனித்து தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போதைய தமிழன், தன் கலைப் பெருமையை யறியாத தன்மையன். தன் கண் முன்னே நாடெங்கும் காணப்படுகிற கலைச் செல்வங்களைக் கண்டு மகிழ இக்காலத்தமிழனுக்கு ஆற்றல் இல்லை என்றே கூறவேண்டும். கலைக்கண் இல்லாதபடியால் கலைச் செல்வங்களைக் கண்டு மகிழும் ஆற்றல் இல்லை. அதனோடு நின்றபாடில்லை. கலைச் செல்வங்களை அழிக்கவும் செய்கிறான். என்னே பேதமை!

மேல் நாட்டாரின் கலை ஆர்வம்

நமது கலைகளின் மேன்மையையும் சிறப்பையும் அழகையும் நம்மவர் அறிந்திராவிட்டாலும், அயல்நாட்டவராகிய மேல்நாட்டார் நன்குணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தமது நாட்டுக் கலைகளைப் போற்றுவதோடு நமது நாட்டுக்கலையையும் போற்றுகிறார்கள். இதனால், நமது நாட்டுக் கலைப்பொருள்கள் பலப் பல மேல் நாடுகளுக்குச் சென்றுவிட்டன. அவ்வாறு மேல் நாடு சென்ற நமது நாட்டுக் கலைச் செல்வங்களில், சிற்ப வேலைப்பாட்டில் சிறந்த கருங்கல் மண்டபமும் ஒன்று. நமது நாட்டு மதுரை மாவட்டத்தில் இருந்த அந்தச் சித்திர மண்டபம், இப்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருக்கிறது. சிந்தித்துப் பாருங்கள். நமது நாட்டுப் பெரிய