உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

251

குகைக்கோயில், மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் அமைக்கப் பட்டது. ஆனால், இக் குகைக்கோயில் முழுவதும் சரிவர அமைக்கப் படாமல் அரைகுறையாக விடப்பட்டிருக்கிறது.

2. பாறைக் கோயில்கள்

மாமல்லன் நரசிம்மவர்மனுடைய குகைக்கோயில்களைப் பற்றி இதுகாறும் கூறினோம். இனி, அவன் அமைத்த இரதங்கள் என்று தவறாகப் பெயர் கூறப்படுகிற பாறைக் கோயில்களைப் பற்றி ஆராய்வோம். மாமல்லபுரத்தில் ஒன்பது பாறைக் கோயில்கள் உள்ளன. அவையாவன:- பஞ்சபாண்டவர் இரதம் என்று தவறாகக் கூறப்படுகிற ஐந்து பாறைக்கோயில்களும், கணேச இரதம் என்று கூறப்படுகிற அத்தியந்தகாம பல்லவேசுரக்கோயிலும், ஊருக்கு அருகில் பக்கிங்காம் கால்வாய்ப் பகுதியில் வலயங்குட்டைக்கு அருகில் இருக்கிற மூன்று பாறைக் கோயில்களும் ஆகும். இந்தப் பாறைக்கோயிலகள் எல்லாம் மாமல்லன் காலத்திலே அமைக்கப் பட்டவை. இவைகளில் திரௌபதை இரதம் என்னும் கொற்றவைக் கோயிலும், கணேசர் இரதம் என்னும் அத்யந்தகாம ஈசுவரக் கோயிலும் முழுக் கோயில்கள் ஆகும். அஃதாவது, கருவறையும் கூட கோஷ்ட பஞ்சரங்களும் விமானமும் ஆகிய கோயிலின் எல்லா உறுப்புகளும் முறைப்படி அமைந்த கோயில்களாகும். மற்றப் பாறைக்கோயில்கள் எல்லாம், கருவறைகள் அமைக்கப்பெறாத வெளிப்புறத்தோற்றம் மட்டும் நன்கு அமைந்த கோயில்கள் ஆகும்.

இந்தப் பாறைக்கோயில்களை அமைத்த நோக்கம் என்ன? இதுபற்றி இதுவரையில் ஒருவரும் ஆராயவில்லை. முதன்முதலாக இக் கேள்விகளுக்கு விடையை ஆராய்வோம்.

மாமல்லனுடைய தந்தையாகிய மகேந்திரவர்மன் முதன் முதலாகப் பாறைகளைக் குடைந்து முகமண்டபத்தையும் கருவறை யையும் மட்டும் உடைய குகைக்கோயில்களை அமைத்தான். ஆனால், அக் குகைக்கோயில்களுக்குமேலே விமானங்களை அவன் அமைக்கவில்லை. விமானங்கள் இல்லாத, கருவறையை மட்டும் உடைய குகைக்கோயில்களாக அவை அமைக்கப்பட்டன.

அவன் மகனான நரசிம்மவர்மன், பாறைகளைக் குடைந்து மண்டபத்தையும், கருவறையையும் உண்டாக்கி, அதனுடன் அவற்றின்