உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

-

திருவுருவம். நல்லகாலமாகப் பூமியிலிருந்து கிடைத்த இக்கலைச் செல்வம் இலண்டன் மாநகரம், டெல்லி முதலிய நகரங்களில் காட்சிக்காக வைக்கப்பட்டு மீண்டும் சென்னைக்கு வந்திருப்பதை யாவரும் அறிவர். இதை இலண்டனுக்கு எடுத்துப் போவதற்கு முன்னர் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் இதற்காக ஈடுகட்டி எடுத்துச் செல்லப்பட்டது இங்குக் குறிப்பிடத்தக்கது.

மாலிக்காபூர் காலத்தில் மட்டும் அல்லாமல், தென் இந்திய சரித்திரத்தில் மிகக் குழப்பகாலமாக இருந்த கி.பி. 17,18-ஆம் நூற்றாண்டுகளிலும், (ஐதராலி கலகம், திப்புசுல்தான் கலகம், பாளையக்காரர் கலகம், நவாப்பு காலத்துப் போர்கள், "கும்பினி" யார் சண்டை முதலியவை) பல சிற்பக்கலையுருவங்கள் நீரிலும், நிலத்திலும் தஞ்சம் புகுந்தன! அவற்றில் பல பிற்காலத்தில் மீட்கப் படாமல் மறைந்து விட்டன.

விக்கிரகக் களவு

கோயில்களில் ஊழியம் செய்யும் குருக்கள் முதலியோர்களில் சிலர் கோயில் விக்கிரகங்களைக் களவாடி விற்று விடுவதும் பண்டைக்காலத்தில் நிகழ்ந்துவந்தது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி ஒன்று தமிழ் நாவலர் சரிதையில் கூறப்படுகிறது.

திருவாரூர் கோயில் குருக்களில் ஒருவராயிருந்த நாகராசநம்பி என்பவர், அறுபத்து மூன்று நாயன்மாருடைய செப்பு விக்கிரகங்களில் இரண்டை களவாடி கன்னானுக்கு விற்றுவிட்டாராம். மற்றவர்கள் இதனை அறிந்தும் களவாடியவருக்கு அஞ்சி அரசரான கிருஷ்ண தேவராயருக்குத் தெரிவிக்காமல் இருந்துவிட்டனராம். இதனை அறிந்த புலவர் ஒருவர் பஞ்சவர்ணக்கிளி ஒன்றை வாங்கி அதற்கு ஒரு ஒ வெண்பாவைக் கற்றுக் கொடுத்து வைத்தாராம். கிருஷ்ணதேவராயர் கண்காணிப்புக்காகக் கோயிலுக்குக் கொண்டு வந்த போது அக்கிளியைப் புலவர் கோவிலுக்கு வந்து ஓரிடத்தில் கட்டி வைத்தா ராம். பஞ்ச வர்ணக் கிளியழகில் ஈடுபட்ட அரசர் அதனிடம் வந்தபோது அது.

66

"முன்னாள் அறுபத்துமூவர் இருந்தார் அவரில்

இன்னாள் இரண்டுபேர் ஏகினார்-கன்னான்

நறுக்குகின்றான் விற்றுவிட்ட நாகராசநம்பி இருக்கின்றான் கிட்டின ராயா.

99