உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

வியன் வீழி மிழலையமர் விகிர்தர் போலும் அத்தனொடு மம்மையெனக் கானார் போலும் அடியேனை யாளுடைய அடிகள் தாமே’

(திருவீழிமிழலை திருத்தாண்டகம் 9)

சில சிவன்கோவில்களில் குபேரனுக்கும் கோயில் அமைக்கப் பட்டுள்ளன. கீழ் வேளுர்க் கோயில் கட்டுமலைமேல் உள்ளகோயில். இது திருவாரூருக்குக் கிழக்கே ஏழு மைல் தூரத்தில் உள்ள இருப்புப் பாதை நிலையத்துக்கு அருகில் உள்ளது. இக்கோயிலில் குபேரனுக்கு ஒரு கோயிலும் குபேரனுடைய உருவமும் இருக்கின்றன.

திருநாகேச்சரக்கோயிலிலும் சங்கநிதி பதுமநிதி உருவங்கள் உள்ளன. திருநாகேச்சரக்கோயில் திருவிடைமருதூர் இருப்புப் பாதை நிலையத்திலிருந்து இரண்டரை மைல் தூரத்தில் உள்ளது.

வேறு பல பழைய சிவன் கோயில்களில் கோபுரவாயில் முதலான வாயில்களின் இரு புறங்களிலும் சங்கநிதி பதுமநிதி உருவங்களைக் காணலாம். இதன் கருத்து என்ன? ஏன் சங்கநிதி பதுமநிதிகளின் உருவங்கள் கோயில் வாயில்களில் அமைக்கப்பட்டுள்ளன? சங்கநிதி பதுமநிதி முதலான பெரிய செல்வங்களைப் பெற்றிருந்தாலும் அந்தச் செல்வங்கள் கடவுளின் திருவருட் செல்வத்துக்கு (கருணாநிதிக்கு) இணையாகா என்பதைக் கோயிலுக்கு வருபவர்களுக்கு நினைவூட்டு வதற்காகவே இவை அங்கு அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கோயிலுக்குச் செல்பவரில் ஒருசிலராவது இந்தப் பதுமநிதி சங்கநிதி உருவங்களைக் கண்டு அவற்றின் கருத்தை உணர்கிறார்களா?

யிரத்தில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள் என்று கருதுகிறேன் இராமலிங்க வள்ளலாரும், சங்கநிதி பதுமநிதிகளை வேண்டாமல், 'நின்கருணை நிதி வேண்டும்' என்று கடவுளின் திருவருள் நிதியைத்தானே வேண்டினார்.!

இறைவனுடைய அருட்செல்வமாகிய கருணாநிதியை மிக நிறையப் பெற்றவர் திருநாவுக்கரசுப்பெருமான் அவர், திருக்கோயில் களில் உழவாரத் திருப்பணி செய்வது வழக்கம். ஒருசமயம் பூம்புகலூர் திருக்கோயிலில் சுற்றுப்பிரகாரத்தில் இருந்த புல்லையும் கல்லையும் உழவாரப் படையினால் களைந்து செப்பனிட்டுக் கொண்டிருந்தபோது பருக்கைக் கற்களுடன் செம்பொன்னும் நவமணிகளும் வெளிப்பட்டன.