உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

281

கடவுளின் திருவருளாகிய கிடைத்தற்கரிய பெருநிதியைப் பெற்றிருந்த அவருக்கு இந்த நிதிகள் பருக்கைக் கற்களும் கூழாங்கற்களும் போலத் தோன்றின. அவர் அவற்றைக் கையினால் தொடாமல் உழவாரத்தினால் எடுத்து அருகிலிருந்த குளத்தில் வீசி எறிந்தார்.

“செம்பொன்னும் நவமணியும் சேண்விளங்க ஆங்கெவையும்

உம்பர் பிரான் திருமூன்றில்

உருள்பருக்கை யுடன் ஒக்க

எம்பெருமான் வாகீசர்

உழவாரத்தினில் ஏந்தி

வம்பலர் வெண்பூங்கமல

வாவியினிற் புக எறிந்தார்.

99

(திருநாவுக்கரசர்புராணம் - 417)

சங்கநிதி பதுமநிதி போன்ற பெருஞ் செல்வங்களைப் பெற்றிருந்தாலும் அவர் கடவுளின் திருவருட் செல்வத்தைப் பெறாதவர்களானால் அவர்களுக்கு மன நிறைவு நிறைமனம் உண்டா? இல்லையே. ஆகவே, கடவுளின் திருவருட் செல்வத்தைப் பெற்றவர், பெரு நிதிகளைப் பெறாதவராக இருந்தாலும் அவர்களே செல்வராவர். கடவுளின் திருவருட் செல்வத்தைக் குறைவறப்பெற்ற அருட்பெருஞ் செல்வராகிய திருநாவுக்கரசர் இதுபற்றி அருளிச் செய்த சங்கநிதிபதுமநிதிச்செய்யுளைக் கூறி அமர்வோம்.

66

“சங்கநிதி பதுமதி இரண்டுந் தந்து

தாணியொடு வானாளத் தருவாரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போ மல்லோம் மாதேவர்க் கேகாந்தர் அல்லராகில் அங்கமெலாம் குறைத்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கை வார்சடைக் கரத்தார்க்கு அன்பராகில்

அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.