உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

283

கூறப்படுகிறது. சிற்ப சாஸ்திரநூல் இந்தக் கட்டடங்களை கஜபிருஷ்டம் என்றும் ஹத்திபிருஷ்டம் என்றும் குஞ்சரபிருஷ்டம் என்றும் கூறுகின்றன. கஜம், உருஸ்தி, குஞ்சரம் என்றும் சொற்களில் பொருள் யானை என்பது. யானைப் பக்கங்களிலிருந்தும் பின்புறத்திலிருந்தும் பார்த்தால் எவ்விதமான தோற்றமாகக் கானப்படுகிறதோ அப்படிப் பட்ட வடிவமுடையது இந்தக் கட்டடங்கள். ஆகவேதான் இக்கட்டடங்களுக்கு கஜபிருஷ்டக் கோவில், உழஸ்தி பிருஷ்டக் கோவில். குஞ்சரக்கோவில் என்று பெயர்கள் கூறப்படுகின்றன. குஞ்சரக்கோவில் என்பதை மணிமேகலை காவியத்தில் குச்சரக் குடிகை என்று கூறப்படுகிறது. குச்சரம் என்பது குஞ்சரம் என்பதன் வலித்தல் விகாரம். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பௌத்தக் கோவிலாகிய சம்பாபதிக்கோவில் இந்த அமைப்பாக இருந்தது. ஆகவே இக்கோவில் குச்சரக்குடிகை என்று பெயர்பெற்றிருந்தது.

தமிழ் நாட்டுக் கோவில் கட்டடங்களின் பெயர்களால் கூறுகிற அப்பர் (திருநாவுக்கரசு) சுவாமிகள் யானைக்கோவில் ஆலக்கோவில் என்று கூறுகிறார்.

அவர் அருளிச்செய்த தேவாரப் பதிகங்களில் திருத்தாண்டகம் ஒன்றில் இப்பெயரைக் கூறுகிறார்.

"பெருக்காறு சடைக்கவிந்த பெருமான் சேரும்

பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றும் கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற்கோயில்

கருப்பறியல் பொருப்ப னைய கொகுடிக் கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்

இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்

திருக்கோயில் சிவனுறையுங் கோயில்சூழ்ந்து தாழ்த்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே.

(திருஅடைவு திருத்தாண்டகம் 5)

இதில் ஆலக்கோயில் கூறப்படுவது கான்க.

சிலர் ‘ஆலக்கோயில்' என்பதை ஆலமரத்தின்கீழே அமைந்த கோயில் என்று தவறாகக் சிலர் கருதுகிறார்கள். அப்படியாகும், புன்னைமரம் மகிழமரம், வேப்பமரம், அரசமரங்களின் கீழிருக்கும் 'கோவில்கள் முறையே புன்னைக்கோயில் மகிழக்கோயில்,