உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

வேப்பங்கோவில், அரசங்கோவில் என்று பெயர்கள் கூறப்பட வேண்டுமன்றோ? அவ்வாறு கூறப்படுவது இல்லையாகையால், ஆலக்கோயில் என்பது யானைக்கோயில் என்பதன் மரூஉ. என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, ஆலக்கோயில் என்பதற்கு ஆலமரத்தின் கீழிருக்கும் கோவில் என்று கூறுவது தவறு. (தொடர்புரை காண்க.)

ஆனைக்கோயிலை ஆனைமாடம்' என்றும் அப்பர் சுவாமிகள் கூறுகிறார். திருக்கடந்தைத் தூங்கானை மாடத் திருப்பதிகம் காண்க. (அப்பர் தேவாரம் முதற்றிருமுறை) 'பெண்னாகடத்துப் பெருந்தூங்கா னைமாடத்தை ‘யும் கூறுகிறார். (அப்பர் தேவாரம், 3 ஆந் திருமுறை, திருவீழிமிழலை. 3.) திருஞானசம்பந்தரும் தூங்கானை மாடம் திருக்கோயிலைக் கூறுகிறார். (சம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை) இவ்வாறு, ஆனைக்கோயில் கட்டடங்கள் தேவாரத்திலும் கூறப்படுகின்றன.

அதன் வளர்ச்சி

"

யானைக்கோயில் கட்டடங்கள் ஆதிகாலத்தில், அதற்குரிய சாதாரண அமைப்பாகக் கட்டப்பட்டன. பிறகு காலஞ்செல்லச் செல்ல யானைக்கோயில் கட்டட அமைப்பில் சில சிறு அமைப்புகள் தோன்றலாயின. ஆகவே ஆனைக்கோயில் கட்டட வரலாற்றில் மூன்றுவித வளர்ச்சியைக் காண்கிறோம். அவற்றை ஆதிகாலம், இடைக்காலம், பிற்காலம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஆதிகாலம் என்பது ஏறத்தாழ கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரையில் உள்ள காலம். இக்காலத்து யானைக்கோயில் கட்டடங்களைப் பௌத்தக் காலத்து யானைக் கோயில் என்று கூறலாம். ஏனென்றால், அக்காலத்தில் பௌத்த மதத்தார்களால் இக்கோவில் கட்டடங்கள் பெரும்பாலும் கட்டப்

பட்டன.

இடைக்கால யானைக்கோயில் கட்டடங்கள் ஏறத்தாழக் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரையில் அமைக்கப் பட்டவை. இவற்றைப் பல்லவர் காலத்து யானைக் கோயில்கள் என்று கூறலாம். ஏனென்றால், இவை பெரும்பாலும் பல்லவ அரசர் காலத்தில்

அமைக்கப்பட்டவை.