உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

285

பிற்காலத்து யானைக்கோவில்கள் ஏறத்தாழக் கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரையில் அமைக்கப்பட்டவை. இக்கால யானைக்கோவில்களுக்குச் சோழ பாண்டியர் காலத்து யானைக் கோயில் என்று பெயர் கூறலாம். ஏனென்றால், பிற்காலச் சோழரும் பாண்டியரும் இக்கோவில்களை அமைத்தார்கள். சோழ பாண்டியருக்குப் பிறகு விஜயநகர அரசர் காலத்திலும் சில யானைக் கோயில் கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம்.

இந்த முறைப்படி யானைக்கோயில் கட்டட அமைப்பையும் அதன் வளர்ச்சியையும் ஆராய்வோம்.

பௌத்தக் காலத்து யானைக் கோவில்கள்

(கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரை)

பௌத்தர் தொன்றுதொட்டு சைத்தியாலயம் (சைத்தியக் கிருஹம்) என்னும் கோவில்களை அமைத்தார்கள் என்றும் அக்கோயில் கள் கஜபிருஷ்டக்கோவில்கள் என்றும் யானைக்கோவில்கள் என்றும் பெயர்பெற்றன என்றும் கூறினோம். பௌத்தமதம், தென் இந்தியா விலும் தமிழ் நாட்டிலும் இலங்கைத் தீவிலும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தி காலத்தில் பரவிற்று. (தமிழ் நாட்டுப் பௌத்த வரலாற்றினை. இந்நூலாசிரியர் எழுதியுள்ள 'பௌத்தமும் தமிழும்' என்னும் நூலில் காண்க.) எனவே. தமிழ் நாட்டில், பௌத்தக்கால யானைக் கோவில் கட்டடங்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் அமைக்கப்பட்டன என்று கொள்ளலாம். பௌத்தக் காலத்து யானைக்கோவில்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். அவை மலைப்பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட யானைக் கோயில்கள். செங்கற்களால் கட்டப்பட்ட யானைக்கோயில்கள் என்பன.

மலைப்பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட அக்காலத்து யானைக்கோயில்கள் இன்றும் அழியாமல் நின்று நிலவுகின்றன. அந்தப் பாறைக்கோயில்களைப் பார்த்து அதன் அமைப்பு எப்படி யிருந்தன என்பதைத் தெரிந்து கொள்கிறோம். ஆனால், அந்த யானைக்கோயில்களின் உட்புற அமைப்பும் முகப்பு (வாயிற்புற) அமைப்பும் எவ்வாறு இருந்தன என்பது மட்டும் இவைகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அக்கோவில்களில் மேற்புற அமைப்பு பாறைக்கோயில்களில் அமைக்கப்படவில்லை. அக்