உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

295

புறத்தில், ஏனைய கோவில் கட்டடங்களில் அமைக்கப்படுகிற ‘கோஷ்ட பஞ்சரம்' என்னும் உறுப்பும் ஆதிகால யானைக் கோவில் களில் கிடையா.

ஏறத்தாழக் கி.பி. 10ஆம் நூற்றாண்டிலே, காஞ்சிபுரத்தில் எழுதப்பட்ட காமிகாகமத்தில் கஜபிருஷ்ட உறஸ்திபிருஷ்டக் கோவில்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஏனைய சிற்ப சாத்திர

நூல்களிலும் கூறப்பட்டுள்ளன.

பல்லவர் காலத்து

யானைக் கோவில்கள்

கி.பி. 600 முதல் 900 வரையில் அமைக்கப்பட்ட யானைக் கோவில் கட்டங்களுக்கும் பல்லவர் காலத்துயானைக் கோவில்கள் என்று பெயர் கூறலாம். ஏனென்றால் பல்லவ அரசர் ஆட்சி கி.பி. 600க்கும் 900க்கும் இடைப்பட்ட காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த தோடு இக்காலத்திலே பல்லவ அரசர்கள் பலவிதமான கோவில் கட்டடங் களைச் சிறப்பாகச் செய்து அமைத்தார்கள் என்று சரித்திரங் கூறுகிறது. கி.பி. 600-க்கு முற்பட்ட காலத்து யானைக் கோவில்களைப் பௌத்த கால யானைக் கோவில்கள் என்று பெயர் சூட்டினோம். பல்லவர் காலத்து யானைக் கோவில்கட்டடங்கள் சில இப்போதும் உள்ளன. சில அழிந்து மறைந்து போயின. முதலாம் மகேந்திரவர்மன் காலம் முதல் அபராஜிதவர்மன் காலம் ஈறாக அமைக்கப்பட்ட யானைக் கோவில்களைத்தான் பல்லவர் காலத்து யானைக் கோவில்கள் என்று கூறுகிறோம்.

வைகளில், காஞ்சிபுரத்துக்கு அடுத்துள்ள கூரம் கிராமத்தில் இருந்த விச்சாதர பல்லவேச்சுரம் என்னும் யானைக் கோவில் அழிந்து மறைந்துவிட்டது. இதுபற்றிப் பின்னர்க் கூறுவோம். இப்போது நன்நிலையில் உள்ள பல்லவர் காலத்து யானைக் கோவில்கள் நாம் அறிந்த வரையில் நான்கே. அவை, மாமல்லபுரத்துச் ‘சகாதேவரம் எனப்படுகிற யானைக் கோவிலும், ஒரகடத்து வாடாமல்லீச்சுரர் கோவிலும், குடிமல்லத்துப் பரசுராமேச்சுரக் கோவிலும், திருத்தணிகை வீரட்டாவேச்சுரர் கோவிலும் ஆகும். இவற்றின் அமைப்புகளை ஆராய்ந்து பார்ப்போம்.