உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

சூரியவெளிச்சம் படாத இடத்தில் நீர் தேங்கியிருந்தால் அந்நீர் கெட்டுப்போகும். காற்றும்வெளிச்சமும் புகாதபடி இக்கோவிலில் நீர் இருந்தால் கெட்டுப்போகும் அல்லவா? ஆகவே, காற்றும் சூரியவெளிச்சமும் உள்ளே புகும்படியாக இந்த யானைக் கோவில் கட்டடத்தில் சுவர்களில் சாளரங்கள் அமைத்திருக் கிறார்கள். இதுதான் இக்கட்டடத்துக்குத் தனிச்சிறப்பாகச் சாளரம் அமைக்கப் பட்டிருப்பதற்குக் காரணம் எனத் தோன்றுகிறது.

கி.பி. 3ஆம் நூற்றாண்டில் செங்கட்சோழனால் கட்டப்பட்ட இத்தூங்கானை மாடக்கோவிலை கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்த அப்பர் (திருநாவுக்கரசர்) சுவாமிகளும் திருஞானசம்பந்தரும் தமது தேவாரப் பாடல்களில் பாடியிருக்கிறார்கள். அப்பர் சுவாமிகள் "கடந்தையுள் தூங்கானைமாடம்' என்றும் 'பெண்ணாகடத்துப் பெருந்தூங்கானைமாடம்' என்றும் கூறுகிறார். திருஞானசம்பந்த சுவாமிகள் 'கடந்தைத் தடங்கோயில் தூங்கானைமாடம்' என்றும் 'பெண்ணாகடத்துப் பெருங்கோயில்' என்றும் கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சியினாலே பௌத்தக்காலத்து யானைக் கோவிலின் அமைப்பைக்கண்டோம். அந்தக் காலத்து யானைக் கோவில்கள் நீண்ட சதுரமாய்ப் பின்புறம் அரைவட்ட வளைவாய் அமைந்த தரையமைப்பையும் சுவர் அமைப்பையும் உடையதாய் யானை முதுகு போன்ற (அல்லது படகைக் கவிழ்த்து வைத்தது போன்ற) கூரையையுடைய முன்புற வாயிலுக்கு மேலே ‘நெற்றி முகம் ' என்னும் சாளரம் அமைந்திருந்தது. செங்கல்லினால் கட்டப்பட்டு உட்பக்கமும் வெளிப்பக்கமும் சுதையும் சுண்ணமும் பூசப்பட்டது. நெற்றிமுகத்தைத் தவிர வேறு சாளரங்கள் இல்லாதது. (பெண்ணா கடத்து யானைக்கோவில் இதற்கு விதிவிலக்காக உள்ளது.) யானையின் உருவம்போல அமைந்திருந்த படியால் யானைக்கோவில் என்றும் குஞ்சரக்குடிகை (குச்சரக்குடிகை) என்றும், கஜபிருஷ்டம், உறஸ்தி பிருஷ்டம் என்றும் பெயர் பெற்றது.

இக்கட்டட அமைப்பில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது ஒன்று உண்டு. அது என்னவென்றால், ஏனைய கோவில் கட்டட அமைப்புகளில் கழுத்தாகிய பிரஸ்திரத்துக்கு மேலே அமைக்கப் படுகிற கர்ணகூடு பஞ்சரம்சாலை என்னும் உறுப்புகள் அக்காலத்து யானைக்கோவில்களுக்குக் கிடையா. மேலும், சுவரின் வெளிப்