உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

293

(திருவானைக்கா என்றும் பெயர் கூறுவர்.) விழுப்புரம் திருச்சி இருப்புப்பாதையில் பெண்ணாகடம் ரெயில் நிலையத்திலிருந்து மேற்கே ஒரு நாழிகை ஒரு நாழிகை தூரத்தில் தூரத்தில் இக்கோவில் இருக்கிறது. இக்கோவிலைக் கட்டியவன் சோழன் செங்கணான் என்பவன். சோழன் செங்கணான் கி.பி. 3ஆம் நூற்றாண்டில் இருந்தவன். அவனால் கட்டப்பட்ட இந்த யானைமாடக்கோவில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் அமைந்தது. எனவே, கபோதேசுவரர், திருவிக்கிரமன் யானைக் கோவில் களைவிட இது பழமையானது.

யானைக்கோவில் அமைப்பாக உள்ள இந்தக் கட்டடம், ஏனைய பௌத்தக் காலத்து யானைக்கோவிலைப் போன்றதே. இது சிவபெருமானுக்காகச் சோழன் கட்டிய கோவில். ஆனால், இதைப் பௌத்தக்காலத்துக் கோவில் என்று ஏன் கூறுகிறோம் என்றால், பௌத்த மதத்தார்களால் சிறப்பாகக் கட்டப்பட்ட காலத்தைச் சேர்ந்தபடியால் இப்பெயர் கூறுகிறோம். இது ஆதிகாலத்திலிருந்தே சிவனுக்காகக் கட்டப்பட்ட கோவில். அதாவது பௌத்தக் கோவிலாக இருந்து சைவக்கோவிலாக மாற்றப்பட்டது அன்று.

இந்தப் பெண்ணாகடத்து யானைக்கோவில் கட்டடத்தில், ஏனைய யானைக்கோவில் கட்டடங்களில் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. அது என்னவென்றால் இக்கட்டடத்தின் சுவர்களில் சாளரங்கள் அமைத்திருப்பதுதான். இருபுறத்துச் சுவர்கவிலும் பின்புறத்துக் சுவரிலும் ஒவ்வொரு சாளரம் வீதம் மூன்று சாளரங்கள் இக்கட்டடத்தில் சிறப்பாக அமைந்துள்ளன. இது அக்கட்டடத்துக்கே உரிய தனிச் சிறப்பு. ஆதிகாலம் இடைக்காலம், பிற்காலம் ஆகிய ஆ காலங்களில் அமைக்கப்பட்ட யானைக்கோவில் கட்டடங்கள் ஒன்றிலேனும் இதுபோன்ற சாளர அமைப்புகள்கிடையா. செங்கட் சோழன் கட்டிய இந்த யானைக்கோவிலில் மட்டும், தனிச் சிறப்பாகச் சாளரங்கள் இருக்கின்றன. ஏன்? இதன் காரணம் என்ன?

இந்த யானைமாடக் கோவிலில் அகநாழிகையில் (அகநாழிகை திருவுண்ணாழிகை கருப்பக்கருகம்.) எப்போதும் நீர் இருந்து கொண்டேயிருக்கிறது. நீரிலே இலிங்க உருவம் எழுந்தருளப் பட்டிருக்கிறது. இது பஞ்சபூத இலிங்கங்களில் அப்புலிங்கம். ஆகவே இது நீரின் இடையே அமைக்கப்பட்டிருக்கிறது. அப்பர் சுவாமிகள் தாம் அருளிய திருவானைக்கா திருந்தாண்டகத்தில், நீரில் எழுந்தருளி யுள்ள இச் சிவலிங்க மூர்த்தியைச் 'செழுநீர்த்திரள்' என்று கூறுகிறார்.