உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

அநந்தசயன மூர்த்தி, மகிஷாசுரன் போர் என்னும் புடைப்புச் சிற்பங்களைப்போலவே இனிய அழகிய சிற்பக்கலைச் செல்வங்களாக இருக்கும். ஆனால், அந்தோ! சமய வெறியர்களால் அவை முழுவதும் அழிக்கப்பட்டன. இல்லை, கொலை செய்யப்பட்டன. அந்தச் சிற்ப உருவங்கள் அமைந்திருந்த இடங்களின் இப்போதும் கற்பாறையில் காணப்படுகின்றன.

காஞ்சி சிற்பக்கலை யழிவு

காஞ்சீபுரத்துக்

காமாட்சியம்மன்

அடையாளங்கள்

கோயிலிலே சில

ஆண்டுகளுக்கு முன்னர் சில புத்தர் உருவச் சிலைகள் இருந்ததைக் கண்டேன். அவைகளில் சில சிறிது உடைபட்டிருந்தன. சில ண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்று பார்த்தபோது அந்தப் புத்தர் உருவச்சிலைகள் எல்லாம் துண்டு துண்டாக உடைக்கப் பட்டுக் கற்குவியலாகப் போடப்பட்டிருந்ததைக் கண்டேன். சமயப் பொறாமை காரணமாக இவைகள் உடைத்து அழிக்கப்பட்டன.

காமாட்சியம்மன் கோயில் குளத்துப் படித்துறைக்கு இரண்டு பக்கத்திலும் இரண்டு புத்தர் உருவச் சிற்பங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தன. அந்தப் புத்தர் உருவங்களைக் காமாட்சி லீலாப் பிரபாவம் என்னும் நூல் “பூதங்கள்” என்று கூறுகிறது. வெண்மையான சலவைக் கல்லினால் புடைப்புச் சிற்பமாகச் செய்யப் பட்டிருந்த அந்த இரண்டு உருவங்களும் உண்மையில் புத்தர் உருவங்களேயாகும். ஆனால், அந்தச் சலவைக் கல் புத்த உருவங்கள் இப்போது அங்கே காணப்படவில்லை. ஆனால், 'சிமிட்' டியால் செய்யப்பட்ட இரண்டு பெரிய விகாரமான பூத உருவங்கள் அங்கு வைக்கப் பட்டிருக்கின்றன. இதுவும் சமயப் பொறாமையினால் விளைந்த உருமாற்றங்களாகும்.

இவற்றை ஏன் இங்குக் கூறினேன் என்றால், சமயப் பொறாமையினாலே அழகிய இனிய சிற்பக்கலைகள் அழிக்கப் பட்டு மறைக்கப்படுகின்றன என்பதைக் கூறுவதற்கே.

சமயப் பொறாமை ஏன்?

நமது நாட்டுச் சிற்பக்கலைப் பொருள்கள் பெரும்பாலும் சமயத் தொடர்புடையவை. சைவ வைணவ பௌத்த ஜைன சமயத் ை