உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

அறிவும் மங்கி மழுங்கி மறைந்து விட்டன என்பதைக் காட்டுகின்றன வன்றோ?

பாதுகாப்பு வேண்டும்

கலை, கலை என்று தாள்களில் எழுதப்படுகின்றன. மேடைகளில் பேசப்படுகின்றன. கலை என்றால், சினிமாவும் நடனமும் இசையும் நாடகமும்தான் என்று பெரும்பாலோர் கருதிக்கொண்டிருக்கிறார்கள். சிற்பம் ஓவியம் முதலியவைகளும் கலைகள் அன்றோ? அவற்றையும் போற்றிப் பாதுகாக்க வேண்டுவது நமது கடமை அல்லவா?

மிகப் புராதனமான ஒரு கோயிலிலே இருந்த, சோழ அரசனு ய செப்புச் சிலை யுருவம் ஒன்று, தனிப்பட்ட ஒருவரிடம் இருப்பதைக்கண்டு வியப்படைந்தேன். சாதாரணமாகக் காணப் படாததும் மிக விசித்திரமானதும் அருமையானதும் ஆன ஒரு நடராச சிற்ப உருவம், பழமையான ஒரு கோயிலில் இருந்தது, இப்போது தனிப்பட்ட ஒருவரின் தனியுடைமையாக இருக்கிறது. இவ்வாறு பழைய கோயில்களிலே தமிழ் நாட்டவருக் குரிய பொதுச் செல்வங் களாக இருந்த அநேக கலைச் செல்வங்கள் பல, சுயநலமுடைய தனிப்பட்ட ஆட்களிடம் சிக்கிக் கொண்டுள்ளன.

இவற்றைப்பற்றி, அறநிலையப் பாதுகாப்பாளரும் அரசாங்கத் தாரும் கவலைகொள்ளாமல் இருப்பது என்னே? இக்கலைச் செல்வங்கள் தமிழ் நாட்டின் பொதுச் சொத்துக்கள் அல்லவோ? இவற்றிற்குப் பாதுகாப்பளிப்பது இவர்களின் கடமையன்றோ?

ஓவியக்கலை

கட்டிடக்கலை, சிற்பக்கலை இவற்றைப்பற்றிச் சிறிதளவாவது பொதுமக்களுக்குத் தெரியும். இவை கோயில்களிலே அடிக்கடி காணப்படுவதால், இவற்றை அறியாமல் இருக்கமுடியாது. ஆனால், ஓவியக் கலையைப்பற்றிப் பொதுமக்களில் பெரும்பான்மை யோருக்குத் தெரியாது. அதாவது பண்டைக் காலத்துச் சித்திரங்களைப் பெரும்பாலோர் அறிந்திருக்க மாட்டார்கள், பண்டைக் காலத்து ஓவியங்கள் எல்லாம் சுவர் ஓவியங்களாக இருந்தன.

அரசர், குறுநில மன்னர், செல்வர் முதலியோர் அரண்மனை களிலும் மாளிகைகளிலும் சுவர் ஓவியங்களை எழுதி வைத்தார்கள்.