உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

கற்பனை உருவங்கள், பிரதிமை உருவங்கள் என்பவை. இவற்றை விளக்குவோம்.

தெய்வ உருவங்கள் இருவகைப்படும். அவை சைவ சமய ருவங்கள், வைணவ சமய உருவங்கள் என்பவை.

சைவ சமயச் சிற்ப உருவங்கள் பலவகைப்படும். சிவபெருமான் பார்வதி உருவங்களைப் பல்வேறு சிற்பங்களாக அமைப்பது வழக்கம். இலிங்கோத்பவ மூர்த்தம், சுகாசண மூர்த்தம், உமாமகேசம், கலியாணசுந்தரம், அர்த்தநாரி, சோமாஸ்கந்தம், அரியாமூர்த்தம், தக்ஷிணாமூர்த்தம், பிட்சாடன மூர்த்தம், கங்காதரர், திரிபுராந்தகர், ஏகபாத மூர்த்தம், திரிபாத மூர்த்தம், பைரவ மூர்த்தம், இடபாரூட மூர்த்தம், சந்திரசேகரர், நடராசர் முதலான பல வகைகள் உள்ளன. பார்வதி, கணபதி, முருகன் உருவங்களும் சைவ சமயத் திருமேனிகளாம். இவற்றில் பல பிரிவுகள் உண்டு. அப்பிரிவுகளை யெல்லாம் விரிவஞ்சிக் கூறாமல் விடுகிறோம்.

"

வைணவ சமயச் சிற்ப உருவங்களில் திருமால், இலக்குமி, கண்ணன், இராமன், பலராமன், நாராயணன், கேசவன், மாதவன், அனந்தசயனன், திரிவிக்கிரமன், மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் முதலிய விதங்கள் உண்டு. இலக்குமிகளில் எட்டு விதமான உருவங்கள் உள்ளன.

சமண சமயச் சிற்பங்களில் இருபத்து நான்கு தீர்த்தங்கரரின் (அருகரின்) உருவங்களும், யட்சகன், யட்சிசாத்தன், சோமட்டேசுவர் முதலான உருவங்களும் உள்ளன. பௌத்த சமயச் சிற்பங்களில் புத்தருடைய உருவம் நின்ற உருவமாகவும் இருந்த உருவமாகவும் கிடந்த உருவமாகவும் (நின்றான், இருந்தான், கிடந்தான்) அமைக்கப்படு கின்றன, அவலோகிதர், தாரை, இடாகினி முதலான பல தெய்வ உருவங்களும் உள்ளன.

நம்முடைய நாட்டுத் தெய்வச் சிற்பங்களைப் பற்றித் தனித்தனியே பல நூல்களை எழுதலாம். ஆனால், தமிழில் நூல்கள் இன்னும் எழுதப்படவில்லை.

சிற்பக்கலையில் இரண்டாவது பிரிவு இயற்கை உருவங்கள் என்று கூறினோம். மனித உருவங்களில் ஆண், பெண், சிறுவர், சிறுமியர், குழந்தைகள், கிழவர் முதலான பலவகை உருவங்களும்,