உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

/ 85

ஆடு, மாடு, மான், யானை, புலி, சிங்கம், குரங்கு முதலான மிருகங்களின் உருவங்களும், வாத்து, கோழி, மயில், கருடன், புறா முதலான பறவைகளின் உருவங்களும் மரம், கொடி, செடி முதலான இயற்கைப் பொருள்களின் உருவங்களும் அடங்கும்.

கற்பனை உருவங்கள் என்பவை, இயற்கையில் இல்லாத கற்பனையாகக் கற்பிக்கப்பட்ட உருவங்கள். கற்பனையாக அமைக்கப் பட்ட பலவகைப் பூக்கள், வல்லிக்கொடிகள், இருதலைப்புள், சரபப்பட்சி மகரம், கின்னரம், குக்குடசர்ப்பம் (கோழிப்பாம்பு), நாகர், பூதர், புருஷா மிருகம், காமதேனு முதலானவை கற்பனை உருவங்களாகும்.

க்

நான்காவதான பிரதிமை உருவங்கள் என்பது உண்மையில் வாழ்ந்திருந்தவர்களின் தத்ரூபமான உருவம். அரசர், அரசியர் மற்றும் பெரியவர்கள் எந்த உருவமாகக் காணப்பட்டார்களோ அதே தோற்றத்தோடு அமைக்கப்படுபவை. மற்ற சிற்பங்களைவிட இது அமைப்பது கடினமானது. கைதேர்ந்த சிற்பிகளால் மட்டும் பிரதிமை யுருவங்கள் செய்யமுடியும். நம்முடைய நாட்டிலே இந்தப் பிரதிமைக் கலை முழுமையாக வளரவில்லை. மேல் நாட்டவர் இந்தக் கலையைச் செம்மையாகவும் திறமையாகவும் வளர்த்து முழு வெற்றி கண்டிருக் கிறார்கள். ஆனாலும், நமது நாட்டுச் சிற்பிகள் பிரதிமை உருவங் களையும் செய்திருக்கிறார்கள். கல்லிலும் செம்பிலும் அவர்கள் செய்து வைத்துள்ள தத்ரூப உருவச் சிற்பங்கள் சில கோயில் கட்டடங்களில் காணப்படுகின்றன. மகாபலிபுரத்தில் வராகப்பெருமாள் குகைக் கோயிலில் நரசிம்மப் போத்தரையன், மகேந்திரப் போத்தரையன் என்னும் பல்லவ அரசர்களின் பிரதிமை உருவங்கள் அவர்களுடைய இராணிகளுடன் கல்லில் புடைப்புச் சிற்பங்களாக (Basrelief) அமைக்கப்பட்டுள்ளன. அர்ச்சுன இரதம், தர்மராஜ ரதம் என்னும் கற்கோயில்களின் சுவர்களிலும் சில பல்லவ அரசர்களின் பிரதிமை உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோவிலில் (பிருகதீஸ்வரர் கோவில்) அதிகாரியாக இருந்த தென்னவன் மூவேந்தவேளான் என்னும் சிற்ப்புப் பெயரையுடைய பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியன் என்பவன் சோழ அரசன், சோழ அரசி ஆகியவரின் செப்புப் பிரதிமைகளைச் செய்துவைத்தான் என்று அங்குள்ள சாசனம் கூறுகிறது. இந்த அதிகாரி, “பெரிய பெருமாள் பிரதிமம்” ஒன்றையும்,