உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இ து கையை இடுப்பின்மேல் வைத்திருக்கிறான். இவன் கொற்ற வைக்குப் பூசை செய்கிற பாரசிவன் போலக் காணப்படுகிறான். கொற்றவையாகிய காளியைப் பூசை செய்கிறவர்களுக்குப் பாரசிவர் என்பது பெயர்.

=

கொற்றவையின் திருவடிகளின் கீழே அமர்ந்துள்ள இவர்கள் என்ன செய்கிறார்கள்? போர்வீரன் கொற்றவைக்கு நவகண்டம் கொடுக்கிறான் போலத் தெரிகிறது. போருக்கும் வெற்றிக்கும் தெய்வமாகிய கொற்றவையை (கொற்றம் = வெற்றி, அவ்வை உயர்ந்தவள்) போர் வீரர்களும் மறக்குடி மக்களும் வழிபடுவார்கள். வெற்றி மடந்தையை வெற்றி வீரர்கள் வழிபடுவது இயற்கைதானே. வெற்றி மடந்தையாகிய கொற்றவையை வழிபடுகிற வெற்றி வீரர்கள், சில சமயங்களில், தம் உடல் உறுப்புக்களை அரிந்து கொற்றவைக்கு இரத்தக் காணிக்கை கொடுப்பதுண்டு. இதற்கு நலகண்டம் கொடுத்தல் என்பது பெயர். இன்னும், சில வீரர்கள் தங்கள் தலையைத் தாங்களே அரிந்து கொற்றவைக்குத் தலைப்பலி கொடுப்பதும் உண்டு. உடம்பின் உறுப்புக்களை அரிந்து நவகண்டம் கொடுப்பதையும் தங்கள் தலையைத் தாங்களே அரிந்து தலைப்பலி கொடுப்பதையும் கலிங்கத்துப்பரணி என்னும் நூல் கூறுகிறது:-

சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர்

66

'தருகவரம், வரத்தினுக்குத் தக்க தாகப்

பலியாக வுறுப்பரிந்து தருதும்” என்று

பரவுமொலி கடலொலியிற் பரக்குமாலோ.

அடிக்கழுத்தி னொடுஞ்சிரத்தை யரிவ ராலோ

அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ கொடுத்தசிரங் கொற்றவையைப் பரவு மாலோ

குறையுடலங் கும்பிட்டு நிற்கு மாலோ.4

இவ்வாறு தமிழ் நூல்களில் கூறப்படுவது வெறுங் கற்பனையல்ல. நடைமுறையில் உண்மையாக நடந்துவந்த செய்கைகளே. கொற்ற வைக்கு நவகண்டங் கொடுத்துத் தலையரிந்து பலிகொடுத்த செய்தி கல்வெட்டுச் சாசனத்திலும் கூறப்படுகிறது. கம்பவர்மன் என்னும் அரச னுடைய 20 ஆவது ஆண்டில், ஓக்கொண்ட நாகன் ஒக்கதீந்தன் பட்டைப்பொத்தன் என்னும் வீரன் கொற்றவைக்கு நவ கண்டம் கொடுத்துத் தலையரிந்து பலி கொடுத்ததற்காக, அவனுடைய மகன்