உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

முடக்குவிரல் எற்றியும் பரப்புவிரல் பாய்ச்சியும்

தனித்துவிரல் தரித்தும் மறித்தெதிர் அடித்தும் குருவிக் கவர்ச்சியின் அதிரப் போக்கியும்

அருவிப் பரப்பின் முரியத் தாழ்த்தியும்

ஒருபால் பந்தின் ஒருபால் பந்துற இருபால் திசையும் இயைவனள் ஆகிப் பாம்பொழுக் காக ஒங்கின ஒட்டியும்

காம்பிலை வீழ்ச்சியின் ஆங்கிழித் திட்டும்”

பந்தடித்து இரண்டாயிரத்து ஐந்நூறு கை கணக்கெடுத்தாள். அது கண்டு எல்லோரும் வியந்தார்கள். அப்போது ஆரியை என்னும் மங்கை, ‘இது என்ன, நான் மூவாயிரம் அடிக்கிறேன் பார்' என்று சொல்லி, எழுந்து வந்து பந்தடிக்கத் தொடங்கினாள்.

"எழுந்துவீழ் பந்தோ டெழுந்து செல் வனள்போல் கருதரு முரிவொடு புருவமும் கண்ணும் வரிவளைக் கையும் மனமும் ஓட

அரியார் மேகலை ஆர்ப்பொடு துளங்கவும் வருகுழை புரளவும் கூந்தல் அவிழவும் அரிமலர்க் கோதையொ டணிகலம் சிதறவும் இருந்தளள் நின்றனள் என்பதை அறியார் பரந்த பஃறோள் வடிவினள் ஆகித் திரிந்தனள் அடித்துத் திறத்துளி மறித்தும்

பந்தடித்து இவள் தான் கூறியபடியே மூவாயிரங் கை கணக் கெடுத்தாள். அதன் பிறகு, ஒருவரும் பந்தடிக்க வரவில்லை.

மூவாயிரம் கைக்குமேல் யாரும் பந்தடிக்க முடியாது என்று எல்லோரும் வாளாவிருந்தனர். அப்போது, அங்கிருந்த கோசல நாட்டு அரசன் மகள் மானனீகை என்னும் மங்கை எழுந்து பந்துகள் இருந்த இடத்திற்குச் சென்றாள். எல்லோரும் வியப்போடும் 'இவள் என்ன செய்யப்போகிறாள்' என்று அவளையே பார்த்தார்கள். அவள் பந்துகளைக் கையிலெடுத்தவுடன், அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும் பெருவியப்பு உண்டாயிற்று. மானனீகை பந்தடிக்கத் தொடங்கினாள். இவள் பந்தாடியதைக் கொங்குவேள் இவ்வாறு விளக்கிக் கூறுகிறார்: ‘சுழன்றன தாமம் குழன்றது கூந்தல்

66

அழன்றது மேனி அவிழ்ந்தது மேகலை