உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*கொல்லிப்பாவை

கொல்லிப் பாவை என்பது கொல்லிமலைமேல் இருந்த அழகான பெண் உருவம். இந்தக் கொல்லிப்பாவை, காண்பவர் மனத்தைக் கவர்ந்து அவர்களை மயங்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது. இப்பாவை, சங்கப் புலவர்களால் சங்க நூல்களிலே கூறப்படுகிறது. இது கொல்லி மலைமேல் இருந்தபடியினாலே இதற்குக் கொல்லிப் பாவை என்னும் பெயர் வந்தது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கொல்லி மலையானது கடை ஏழு வள்ளல்களுள் ஒருவனாகிய ஓரி என்னும் குறுநில மன்னனுக்கு உரியதாக இருந்தது. வள்ளல் ஓரி, வில்வித்தையில் வல்லவன். ஆகவே, அவன் சங்கப் புலவர்களால் வல்வில் ஓரி என்று கூறப்

பட்டான்.

ஓரி என்னும் வள்ளல் வாழ்ந்திருந்த அதே காலத்தில் காரி என்னும் மற்றொரு வள்ளலும் வாழ்ந்திருந்தான். காரி என்பவனும் கடை ஏழுவள்ளல்களுள் ஒருவன். முள்ளூர் என்னும் ஊரை ஆண்ட குறுநில மன்னன். காரி கொங்கு நாட்டுப் பெருஞ்சேரலிறும் பொறைக்குப் படைத் தலைவனாக இருந்தான். ஆகவே, காரி ஓரியுடன் போர்செய்து, அப்போரிலே ஓரியைக் கொன்று, அவனுடைய கொல்லிமலையைக் கைப்பற்றி அதனைச் சேர மன்னனுக்குத் கொடுத்தான். இச்செய்தியைக் கல்லாடனார் என்னும் புலவர் கூறுகிறார்:

66

செவ்வேல்

முள்ளூர் மன்னன் கழல் தொடிக் காரி செல்லா நல்லிசை நிறுத்த வல்வில் ஓரிக் கொன்று சேரலர்க் கீத்த

செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி

(அகம்., 209) என்று அவர் இச்செய்தியை விளக்கமாகக் கூறுகிறார். எனவே, ஓரிக்கு உரியதாக இருந்த கொல்லிமலை, பெருஞ்சேரலிரும்பொறைக்கு உரியதாயிற்று.

  • நுண்கலைகள் (1967) நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை.