உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் /135

காண்வரு குவளைக் கண்ணாள்

99

(பதுமையார் இலம்பகம் 89, 92)

இச் செய்யுள்களை இந்த ஓவியங்கள் நினைவுறுத்துகின்றன.

தலைநிறையப் பூச்சூடிய இந்த நடனமங்கையர் அணிந்தி ருக்கும் நகைகளைப் பாருங்கள். இந்த நகைகளைப் பார்க்கும்போது பூம்புகார்ப் பட்டினத்து மாதவி அணிந்த நகைகளை இளங்கோவடிகள் கூறுவது நினைவுக்கு வருகிறது. பேர்போன நடனமங்கையாகிய மாதவி அணிந்திருந்த நகைகளைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. சிலம்பு, பாடகம், சதங்கை, காற்சரி என்பவற்றைக் காலுக்கு அணிந்து, முப்பத்திரண்டு முத்துமாலைகளினால் அமைக்கப்பட்ட விரிசிகை என்னும் மேகலையை அரையிலே நீலப்பட்டாடையின் மேல் அணிந்து, மாணிக்க வளையையும் பொற் கடகத்தையும் தோளுக்கு அணிந்து, சூடகம் நவரத்தினவளை பொன்வளை சங்கவளை பவழவளைகளை முன்கைக்கு அணிந்து, மகரவாய் மோதிரம் முதலிய மோதிரங்களை விரல்களுக்கு அணிந்து, வீரசங்கிலி நேர்ஞ்சங்கிலி சவடி சரப்பணி முத்தாரம் முதலியவற்றைக் கழுத்துக்கு அணிந்து, பத்திரகுண்டலம் குதம்பை முதலிய அணிகளைக் காதுக்கணிந்து, சீதேவி வலம்புரி பூரப்பாளை தென்பல்லி வடபல்லி என்னும் அணிகளைத் தலைக்கு அணிந்து மாதவி என்னும் நாடக மடந்தை எழிலுடன் விளங்கினாள் என்று சிலப்பதிகாரம் (கடலாடு காதை) கூறுவதுபோலவே, இந்தச் சித்தன்னவாசல் ஓவியத்தில் காணப்படும் நாடக மடந்தையரும் பலவித நகைகளையும் அணி களையும் பூண்டு இனிய தோற்றத் தோடு காட்சியளிக்கிறார்கள்.

அருகக்கடவுள் எழுந்தருளியுள்ள இந்தக் குகைக்கோயிலிலே அரம்பையரின் நடனக்காட்சி ஓவியமாக எழுதப்பட்டிருப்பதின் காரணம் என்ன?

சமவசரணம் என்பது ஒன்றுக்குள் ஒன்றாக ஏழுமாடவீதிகளை யுடையது. இந்தச் சமவசரணத்தின் நடுவிலே அமைந்துள்ள ஸ்ரீநிலையம் என்னும் கோயிலில் அருகக்கடவுள் எழுந்தருளியிருந்து திருவறம் போதிக்கிறார். ஏழு மாடவீதிகளையும் கடந்து ஸ்ரீநிலையத் துக்குச் செல்லும்போது, ஒவ்வொரு மாடவீதியிலும் நடன அரங்கங்கள் உள்ளன. அந்த அரங்கங்களில் அரம்பையர் அருகப்பெருமானின்