உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

இக்காலத்து ஆண்களும் பெண்களும் பருத்தித் துணிகளையும் பட்டாடைகளையும் கால்முதல் கழுத்து வரையில் அணிந்து உடம்பு முழுவதையும் மறைப்பது போல, அக்காலத்து ஆண்களும் பெண்களும் உடம்பு முழுவதும் ஆடையினால் மறைக்கவில்லை. செல்வரும் பிரபுக்களும் அரசர்களுங்கூட வெற்றுடம்பினராக இருந்தார்கள். உடம்பில் சட்டை அணிவதை அநாகரிகமாக அக்காலத்தவர் கருதினார்கள். அரசர்களிடம் ஊழியம் செய்த உத்தியோகஸ்தர்மட்டும் அக்காலத்தில் சட்டை அணிந்தனர்; சட்டை அணிந்த உத்தியோகஸ்தனுக்குக் கஞ்சுகன் என்பது பெயர். சங்க காலத்திலே காஞ்சிபுரத்தில் இருந்து அரசாண்ட இளங்கிள்ளி என்னும் சோழ அரசனிடம் சட்டை அணிந்த கஞ்சுகர் உத்தியோகஸ்தராக இருந்ததை மணிமேகலை கூறுகிறது.

66

'வையங் காவலன் தன்பாற் சென்று

கைதொழுதிறைஞ்சிக் கஞ்சுகன் உரைப்போன்

என்று மணிமேகலை 28-ஆம் காதை (177-178) கூறுகிறது.

சேரன் செங்குட்டுவனுடைய ஒற்றர் தலைவனாகிய நீலன் சட்டை அணிந்திருந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

“நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்

99

என்பது சிலப்பதிகாரம், நடுகற் காதை (அடி 80) கூறுவதாகும்.

சாவகத்தீவின் அரசனான புண்ணியராசன், தருமசாவகன் என்னும் பௌத்த முனிவருடன் இருந்த மணிமேகலையைக் கண்டு இவள் யார் என்று கேட்டபோது, சட்டை அணிந்த அரசனுடைய உத்தியோகஸ்தன் அவள் யார் என்பதை அரசனுக்குக் கூறினான்.

66

"இங்கிணை இல்லா இவள் யார் என்னக்

காவலற் றொழுது கஞ்சுகன் உரைப்போன்

99

என்று மணிமேகலைக் காவியம் 25-ஆம் காதை (அடி 10-11) கூறுவது காண்க.

தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோவிலிலே இருக்கிற சோழர் காலத்து ஓவியங்களில், அரசன்முதல் ஆண்டிவரையில், ஆண்பெண் உருவங்கள் காணப்படுகின்றன. அந்த உருவங்கள் எல்லாம் அரைக்குமேலே வெற்றுடம்பாக உள்ளன. ஆனால், அந்த ஓவியங்