உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

151

களில் கஞ்சுகர் உருவங்கள் மட்டும் சட்டை அணிந்திருப்பதைக் காண்கிறோம். இதுபோன்று, விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள பெயர்பெற்ற அஜந்தா மலைக்குகைகளில் எழுதப்பட்ட ஓவியங்களிலும், கஞ்சுக மக்களைத் தவிர ஏனைய அரசர் முதலிய எல்லாரும் அரைக்குமேலே ஆடையில்லாமல் காணப்படுகின்றனர். கோவில்களில் காணப்படுகிற பழைய சிற்ப உருவங்கள்கூட, அரைக்குக் கீழே ஆடையணிந்து மேற்பகுதி வெற்றுடம்பாக இருப்பதைக் காண்கிறோம். இந்த ஓவியங்களும் சிற்பங்களும் அக்காலத்து மக்கள் ஆடையணிந்த முறையை நன்றாகத் தெரிவிக்கின்றன.

நமது நாட்டுப் பெண்மகளிர் இரவிக்கையினாலும் புடவை யினாலும் உடம்பின் மேற்பகுதியை மறைக்கத் தொடங்கியது. ஐரோப்பியரும் முஸ்லிம்களும் நமது நாட்டுக்கு வந்தபிறகுதான். ஏறக்குறைய 400, 500 ஆண்டுகளாகத்தான் நமது நாட்டுப் பெண்கள் மேலாடை அணிந்து வருகின்றனர் பெண்கள் மேலாடை அணியத் தொடங்கிய காலத்தில், உயர்ந்த சாதிப் பெண்கள் மட்டும் மேலாடை அணியலாம் என்றும், தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்றும் கட்டுப்படுத்தினார்கள் ‘மேல்’ சாதிக்காரர்கள். தன் காரணமாக “மார்ச்சீலைக் கலகம் என்னும் கலகமும் சண்டையும் அக்காலத்தில் திருவாங்கூரில் நிகழ்ந்ததை வரலாறு கூறுகிறது.

நமது நாட்டிலே ஆடவரும் பெண்டிரும் மேலாடை அணியாமல் வெற்றுடம்பினராக இருந்த காலத்திலே, அவர்கள் உடம்பு முழுவதும் பலவிதமான நகைகளை அணிந்தார்கள். முக்கியமாக, அக்காலத்துப் பெண்கள் தலைமுதல் கால்வரையில் உடம்பு முழுவதும் நகைகளை அணிந்து ‘பொன் காய்த்த மரம்’ போலக் காணப்பட்டனர். பண்டைக் காலத்து மக்கள் வெற்றுடம்பினராக இருந்த காரணத்தினாலே, நகைகளை அதிகமாக அணிந்தார்கள் என்னும் காரணம் ஒரு புறம் இருக்க, அவர்கள் அதிகமாக நகைகளை அணிந்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு. பொன்னையும் பொருளையும் நம்பிக்கையுடன் பாதுகாத்து வைக்கும் வங்கி (பாங்கி Bank) என்னும் சேமிப்பு நிலையங்கள் அக்காலத்தில் இல்லாத படியினாலே, அவர்கள் தாங்கள் ஈட்டிய பொருள்களைப் பொன்னாலும், வெள்ளியாலும், முத்து, மாணிக்கம் முதலிய நவரத்தினங்களினாலும் நகைகளைச் செய்து