உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

இவற்றில் முதல் ஆறு ஆடல்களும் நின்று ஆடுவது. பின் ஐந்தும் வீழ்ந்தாடுவது.

66

66

'அல்லியங் கொட்டி குடை குடம் பாண்டரங்கம்

மல்லுடன் நின்றாடல் ஆறு

துடி கடையம் பேடு மரக்காலே பாவை மடிவுடன் வீழ்ந்தாடல் ஐந்து

என்பதனால் இதனை அறியலாம்.

இனி அந்த ஆடல்களைப்பற்றி தெரிந்த வரையில் கூறுவோம்.

அல்லியக் கூத்து: இது கண்ணபிரான் தன்னைக் கொல்ல வந்த யானையுடன் போர் செய்து அதனுடைய மருப்புக்களைக் கையினால் பற்றி அசைத்து ஒடித்து, அந்த யானையைக் கொன்றதைக் காட்டும் ஆடல். காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்திருந்த மாதவி என்னும் நாடக மடந்தை, இந்திர விழா நடந்தபோது இந்தக் கூத்தையாடிக் காண்போரை மகிழ்வித்தாள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

“கஞ்சன் வஞ்சகம் கடத்தற் காக

அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்

அல்லியத் தொகுதி

(சிலம்பு, கடலாடுகாதை, 43-45)

என்பது அந்தச் செய்யுட்பகுதி. இதற்கு உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விளக்கம் இது: “அஞ்சன வண்ணன் ஆடிய ஆடல் பத்துள், கஞ்சன் வஞ்சத்தின் வந்த யானையின் கோட்டை ஒசித்தற்கு நின்றாடிய அல்லியத் தொகுதி யென்னுங் கூத்து.

இந்த அல்லியக் கூத்துக்கு ஆறு உறுப்புக்கள் உண்டு.

கொடு கொட்டி: சிவபெருமான் அவுணர்களின் முப்புரத்தை எரித்தபோது, அது எரிமூண்டு எரிவதைக் கண்டு வெற்றி மகிழ்ச்சி யினாலேயே கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. தீ பற்றி எரிவதைக் கண்டு மனம் இரங்காமல், கைகொட்டி ஆடியபடியால் கொடுகொட்டி என்னும் பெயர் பெற்றது. இதற்குக் கொட்டிச் சேதம் என்றும் பெயர் உண்டு.

"பாரதி யாடிய பாரதி யரங்கத்துத் திரிபுரம் எரியத் தேவர் வேண்ட