உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

8. உவகை (காமம்)

“செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்

றல்லல் நீத்த உவகை நான்கே

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை 12-ஆம் அடியின் உரையில் அடியார்க்கு நல்லார் ஒன்பது சுவைக்கும் உரிய அவிநயங் களைக் கூறி அவை ஒவ்வொன்றுக்கும் சூத்திரச் செய்யுளை மேற்கொளாகக் காட்டுகிறார். “சுவை ஒன்பது வகைப்படும்: அவை வீரச்சுவை அவிநயம், இழிப்புச்சுவை அவிநயம் பயச்சுவை அவிநயம் அற்புதச்சுவை அவிநயம், இன்பச்சுவை அவிநயம், அவலச்சுவை அவிநயம், நகைச்சுவை அவிநயம், நடுவு நிலைச்சுவை அவிநயம், உருத்திரச்சுவை அவிநயமென” என்று கூறி இந்த அவிநயங்களுக்குச் சூத்திரச் செய்யுட்களை மேற் கோள் காட்டுகிறார். அச்சூத்திரங்களை விரிவஞ்சி இங்குக் காட்டாமல் விடுகிறோம். அந்தச் சூத்திரங்கள் நாடகம் எழுதுவோருக்கும், நாடகம் நடிப்போருக்கும் பெரிதும் பயன்படுமாகையால் அவற்றைச் சிலப்பதிகார உரையில் கண்டு

கொள்க.

மற்றும் இருபத்து நான்கு பாவகங்களை (அவிநயங்களை), அடியார்க்குநல்லார் சிலப்பதிகார அரங்கேற்று காதை 12-ஆம் அடியுரையில் குறிப்பிடுவதோடு இருபத்து நான்கு சூத்திரச் செய்யுட்களையும் மேற்கோள் காட்டியுள்ளார். அவையும் நாடக ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும்.

இசைப்பாட்டில்

வரிக்கூத்து

கானல்வரி, வேட்டுவவரி முதலான வரிப்பாட்டுக்கள் இருப்பதுபோல, நாடகத்திலும் வரிக் கூத்து உண்டு. வரிக்கூத்து என்பது அந்தந்தத் தொழிலைச் செய்கின்றவரின் நடையுடை பாவனை போன்று நடிப்பது.

"வரியெனப்படுவது வகுக்குங்காலைப் பிறந்த நிலனும் சிறந்த தொழிலும் அறியக் கூறி ஆற்றுழி வழங்கல்

(சிலம்பு அரங்கேற்று காதை 24-ஆம் அடியுரை மேற்கோள், வேனிற்காதை 77-ஆம் அடியுரை மேற்கோள் அடியார்க்கு நல்லார்.)