உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

197

பெண்மணிகள் சிலர், பாண்டி மன்னனைப் புகழ்ந்து பாடிக் கொண்டே பந்து ஆடியதைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் சந்தமொடு பாடும் செந்தமிழ் கவிதைகள் சிந்தையைக்

கவர்வனவாகும்.

பொன்னிலங்கு பூங்கொடிப் பொலஞ்செய்கோதை வில்ல மின்னிலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும் தென்னன்வாழ்க வாழ்கவென்று சென்று பந்தடித்துமே தேவரார மார்பன்வாழ்க என்றுபந் தடித்துமே.

பின்னும்முன்னும் எங்கணும் பெயர்ந்துவந் தெழுந்துல மின்னுமின் இளங்கொடி வியனிலத் திழிந்தெனத் தென்னன்வாழ்க வாழ்கவென்று சென்று பந்தடித்துமே தேவரார மார்பன்வாழ்க வென்றுபந் தடித்துமே. துன்னிவந்து கைத்தலத் திருந்ததில்லை நீள்நிலம் தன்னினின்றும் அந்தரத் தெழுந்ததில்லை தானெனத் தென்னன்வாழ்க வாழ்கவென்று சென்று பந்தடித்துமே தேவரார மார்பன்வாழ்க வென்றுபந் தடித்துமே.

அக்காலத்து மகளிர் இக்காலத்துப் பெண்மணிகளை போன்று பந்தாடினார்கள் என்றால், இப்போது ஆடப்படுகிற பேட்மின்டன். டென்னிஸ்போன்ற விளையாடுகளை அவர்கள் விளையாடினார்கள் என்பது அன்று. பல காலத்துப் பெண்மணிகள் ஆடிய பந்தாட்டம் வேறு விதமாக இருந்தது. அவர்கள் ஆடிய பந்துகள் நெட்டி, மயில், இறகு, கம்பளி மயிர் முதலிய இலேசான பொருள்களால் செய்யப்பட்டு, வெண்மை நிறமாகவும், கருமை நிறமாகவும், செம்மை நிறமாகவும் அமைந்து, காண்பதற்கு அழகாக இருந்தன. ஒரே சமயத்தில் ஏழு பந்துகளை எறிந்து விளையாடினார்கள் என்பது தெரிகிறது. ஆனால், அவர்கள் ஆடிய பந்தாட்டத்தின் முறையை இப்போது தெரிந்துகொள்ள முடியவில்லை. ஒவ்வொரு வரும் தமது ஆட்டத்தில் ஆயிரம் கை, மூவாயிரம் கை, ஆறாயிரம் கை என்று

கணக்கெடுப்பார்கள். யார் அதிக எண் கணக்கேற்று கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர் ஆவர். இந்தப் பந்தாட்டத்தை அக்காலத்தில் மணம் ஆகாத பெண் மணிகள்மட்டுமே ஆடினார்கள் என்று தோன்றுகிறது.