உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

பெருங்கதை என்னும் நூலிலே வத்தவ காண்டத்தில் பந்தடி கண்டது என்னும் ஒரு பகுதியுண்டு. அதில் பெண்மணிகள் சிலர் பந்தாடிய செய்தி கூறப்படுகிறது. வாசவதத்தை, பதுமாவதி என்னும் இரண்டு அரசிகள் பந்தாட்டம் காண்பதற்காகத் தமது தோழி மாருடன் சென்று அரண்மனையின் நிலா முற்றத்திலே அமர்ந்தனர். அப்போது, இராசனை என்னும் பெண்மணி முற்றத்தின் நடுவில் வந்து நின்று, 'கண் இமையாமல் கணக்கெடுங்கள்' என்று கூறிப் பந்தாடத் தொடங்கினாள். 'கண்ணிமை யாமல் என்ணுமின்' என்று வண்ண மேகலை வளையொடு சிலம்பப் பாடகக் கால்மிசை பரிந்தவை விடுத்தும் சூடக முன்கையில் சுழன்றுமா றடித்தும் அடித்த பந்துகள் அங்கையில் அடக்கியும் மறித்துத் தட்டியும் தனித்தனி போக்கியும் பாயிர மின்றிப் பல்கலன் ஒலிப்ப

ஆயிரம்கை நனி அடித்தவள் அகன்றாள்.

99

அதன்பிறகு காஞ்சனமாலை என்பவள் வந்து பந்துகளை

எடுத்து ஆடினாள் ஆவள்.

"பிடித்த பூம்பந் தடித்து விசும்பேற்றியும்

அடித்த பந்தால் விடுத்தவை ஒட்டியும்

குழல்மேல் வந்தவை குவிவிரல் கொளுத்தியும்

நிழல்மணி மேகலை நேர்முகத் தடித்தும்

கண்ணியில் சர்த்தியும் கைக்குள் போக்கியும்

உண்ணின்று திருத்தியும் விண்ணுறச் செலுத்தியும் வேயிருந் தடந்தோள் வெள்வளை ஆர்ப்ப

ஆயிரத் தைந்நூ றடித்தவள் அகன்றாள்”.

அதன் பிறகு, அயிராபதி என்பவள் வந்து ஆடினாள்.

66

“நாற்றிசைப் பக்கமும் நான்கு கோணமும்

காற்றினும் கடிதாக் கலந்தனள் ஆகி

அடித்தகைத் தட்டியும் குதித்துமுன் புரியா

அகங்கை ஒட்டியும் புறங்கையில் புகுத்தியும்

தோள்மேல் பாய்ச்சியும் மேல்மேல் சுழன்றும் கூன்மேல் புரட்டியும் குயநடு ஒட்டியும்