உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் /199

வாக்குறப் பாடியும் மேற்படக் கிடத்தியும் நோக்குநர் மகிழப் பூக்குழல் முடித்தும் பட்ட நெற்றியில் பொட்டிடை ஏற்றும் மற்றது புறங்கையில் தட்டினள் எற்றியும்

பந்தடித்த இவள் இரண்டாயிரம் கை கணக்கெடுத்தாள். அப்போது அங்கிருந்தோர் எல்லோரும் அவளைப் புகழ்ந்து மெச்சினார்கள். அதன் பிறகு, விச்சுவலேகை என்பவள், 'நான் இருக்க அவளைப் புகழ்கிறீர்களே, இதோ பாருங்கள்' என்று கூறிப் பந்தடிக்கத் தொடங்கினாள். அவள்,

66

'கருவிக் கோல்நனி கைப்பற் றினளாய் முரியுங் காலைத் தெரிய மற்றதில் தட்டினள் ஒன்றொன் றுற்றனள் எழுப்பிப் பத்தியில் குதித்துப் பறப்பனள் ஆகியும் வாங்குபு கொண்டு வானவில் போல

நீங்கிப் புருவ நெரிவுடன் எற்றியும்

முடக்குவிரல் எற்றியும் பரப்புவிரல் பாய்ச்சியும் தனித்துவிரல் தரித்தும் மறித்தெதிர் அடித்தும் குருவிக் கவர்ச்சியின் அதிரப் போக்கியும்

அருவிப் பரப்பின் முரியத் தாழ்த்தியும்

ஒருபால் பந்தின் ஒருபால் பந்துற

இருபால் திசையும் இயைவனள் ஆகிப்

பாம்பொழுக் காக ஒங்கின ஒட்டியும்

காம்பிலை வீழ்ச்சியின் ஆங்கிழித் திட்டும்

பந்தடித்து இரண்டாயிரத்து ஐந்நூறு கை கணக்கெடுத்தாள். அது கண்டு எல்லோரும் வியந்தார்கள். அப்போது ஆரியை என்னும் மங்கை, 'இது என்ன, நான் மூவாயிரம் அடிக்கிறேன் பார்' என்று சொல்லி, எழுந்து வந்து பந்தடிக்கத் தொடங்கினாள்:

"எழுந்துவீழ் பந்தோ டெழுந்துசெல் வனள்போல் கருதரு முரிவொடு புருவமும் கண்ணும்

வரிவளைக் கையும் மனமும் ஒட

அரியார் மேகலை ஆர்ப்பொடு துளங்கவும்

வருகுழை புரளவும் கூந்தல் அவிழவும்