உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

போர்க் களத்திலே தன்னுடைய கணவனாகிய சூரியனை இழந்து விட்ட அந்திமாலை என்னும் மகள் ஒருத்தி, துயரத்தோடு தாய் வீட்டுக்குத் திரும்பி வந்ததுபோல இருக்கிறது என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார்.

66

"அமரக மருங்கில் கணவனை இழந்து தமரகம் புகூஉம் ஒருமகள் போலக் கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமொடு அந்தி என்னும் பசலைமெய் யாட்டி வந்திருந் தனளால் மாநகர் மருங்கென்”

கல்விசேர் மாந்தர்

""

வயலில் நெற்பயிர் வளர்கிறது. வளர்ந்தபின் பசும் பயிர் கதிர் விடுந் தருவாயிலிருக்கிறது. சிறிது காலங் கழித்துக் கதிர் வெளிப்பட்டுப் பூத்துத் தலைநிமிர்ந்து நின்று காற்றில் சுழன்று ஆடுகிறது. பிறகு மணிகள் முற்றிப் பொன்னிறமான கதிர்கள் தலைசாய்ந்து கிடக்கிறது. இந்த நெல்வயல் காட்சியை எல்லோருங் கண்டிருக்கிறோம். காவியக் கலைஞர் திருத்தக்க தேவரும் நெல் வயலின் இயற்கைக் காட்சிகளைக் கண்டிருக்கிறார். அப்போது அவருடைய மனத்திலே சில புதிய கருத்துக்கள் தோன்றின. வயல் காட்சியில் தாம் கண்ட புதிய கருத்துக்களை அமைத்து அவர் ஒரு சொல்லோவியம் தீட்டினார்.

66

“சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல்

மெல்லவே கருவிருந் தீன்று, மேலலார்

செல்வமே போல் தலைநிறுவித், தேர்ந்தநூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே".

கருக்கொண்ட நெற்பயிர் கதிர் வெளிப்படாதிருக்கும் நிலையில் சூல்கொண்ட பச்சைப்பாம்பின் தோற்றம்போல் காணப்படுகிறது. கதிர் வெளிப்பட்டுப் பூத்துத் தலை நிமிர்ந்து இருப்பதும் காற்றில் சுழன்றா டுவதும், அறிவில்லாத கீழ்மக்கள் சிறிது செல்வம் கிடைத்தவுடன் ஒருவரையும் மதிக்காமல் இறுமாந்து தலைகால் தெரியாமல் வாழ்வதுபோலக் காணப்படுகிறது. மணிமுற்றின கதிர்கள் சாய்ந்து நிற்கும் காட்சி, கற்றறிந்த அறிஞர் அடக்கமாக இருப்பது போலத் தோன்றுகிறது. இவ்வாறு நெற்பயிரில் தாம் கண்ட கருத்துக்களைத் திருத்தக்க தேவர் அழகு, இனிமை, உண்மை என்னும் மூன்றும் தோன்றப் பாடியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.