உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் 235

இளமையைத் தேடுகிறார்.

மூத்து முதிர்ந்த கிழவர், குனிந்த உடம்பும் திரைத்த தோலும் நரைத்த தலையும் உள்ளவர். அவரால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. கால்களும், கைகளும் நடுங்குகின்றன. கையில் பிடித்த தடியைத் தரைமேல் ஊன்றி வளைந்த முதுகோடு குனிந்து தரையை நோக்கி நடக்கிறார். தண்டு ஊன்றித் தரையை நோக்கிக் குனிந்து நடக்கிற அவர், எதையோ தேடுகிறார் போலக் காணப்படுகிறார். அவர் எதைத் தேடுகிறார் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் கவிஞர் ஒருவருக்கு அவர் தேடுவது இன்னதென்பது தெரிகிறது. அந்தக் கவிஞர், கிழவர் நடக்கும் காட்சியைச் சொல்லோவியமாகத் தருகிறார். “கம்பித்த காலன் கோலன்

கையன கறங்கு தண்டன்

கம்பித்த சொல்லன் மெய்யைக் கரையழி நரையுஞ் சூடி வெம்பித் தன் இளமை மண்மேல்

விழுந்தது தேடுவான் போல்

செம்பிற் சும்பிளித்த கண்ணன்

சிரங்கலித் திரங்கிச் செல்வான்”.

கிழவர் கோலூன்றித் தள்ளாடிக் குனிந்து தரையைப் பார்த்து நடப்பது, விழுந்துபோன தன்னுடைய இளமைப் பருவத்தைப் தேடி நடப்பதுபோல இருக்கிறது என்று கவிஞர் கூறுவது சுவையாக இருக்கிறதன்றோ?

பட்டுப்போன மரம்

பாலை பாடிய பெருங்கடுங்கோ, சேர மன்னர் குலத்தவர்; கலித்தொகையிலே இவர் பாலைத்திணையைப் பாடியுள்ளார். அவர் பாடிய செய்யுள் ஒன்றிலே வரண்ட பாலை நிலத்தில் காய்ந்து பட்டுப்போன மரத்தைக் கூறுகிறார். கூறுகிறவர் தாம் அறிந்த உலகியல் உண்மைகளை அந்த மரத்துடன் பொருத்திக் கூறுகிறார்.

நீர் அற்ற பாலைவனத்திலே சூரியனின் வெம்மையைத் தவிர அங்கு வேறொன்றுங் கிடையாது. எங்கோ ஓரிடத்தில் காணப் படுகிற மரங்களும் கருகிக் காய்ந்து கிடக்கின்றன. உலர்ந்து பட்டுப்போன மரம், அந்தப்பாலை நிலத்தின் வெம்மைக்குச் சான்று காட்டி நிற்கின்றது.