உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

ஆனால், காதல் நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தது, கடலினும் ஆழமானது என்று எவ்வாறு ஓவியந் தீட்டிக்காட்ட முடியும்? முடியாதன்றோ?

தெய்வத் திருவருள்:

அப்பரடிகளை நாவுக்கரசர் என்று ஆன்றோர் போற்றியது சாலப் பொருந்தும். திருநாவுக்கரசரின் சொல்லோவியங்கள் வளமுள்ளவை. அவருடைய செல்லோவியங்களில் ஒற்றைக் கவிதையின் ஆற்றலுக்கு உதாரணமாகக் காட்டுவோம். கடவுளின் திருவடி நிழல் (தெய்வத் திருவருள்) எப்படியிருப்பது என்பதை அவர் சொல்லோவியமாகக் காட்டுகிறார்:

“மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும், மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.

இளவேனிற்காலம், மாலை நேரம், பால் போன்ற நிலா வெளிச்சம், தாமரைக்குளம், தென்றல் காற்று, வீணையின் இனிய இசை இவ்வளவும் ஓரிடத்தில் ஒருங்கே அமைத்திருப்பது போன்றது கடவுளின் திருவருள் இன்பம் என்று நாவுக்கரசர் தீட்டிய சொல்லோ வியத்தை ஓவியக் கலைஞர்கள் ஓவியத் தீட்டிக் காட்ட முடியாது. ஓவியமாகவோ சிறப்மாகவோ அமைத்துக் காட்டினாலும் இச் செய்யுளின் முழுக் கருத்தையுங் காட்ட இயலாது. இச் செய்யுளைப் படித்துப் படித்துச் சுவைத்துச் சுவைத்து உணர்ந்து உணர்ந்து அனுபவிக்க முடியுமேயல்லாமல் ஓவியத்தில் எழுதிக்காணமுடியாது.

நெல்வயல்:

வயலிலே நெற்பயிர் செழிப்பாக வளர்கிறது. வளர்த்த பசும்பயிர் கதிர்விடும் நிலையை யடைகிறது. சிறிது காலங் கழித்துக் கதிர் வெளிப்பட்டுப் பூத்துத் தலை நிமிர்ந்து நின்று காற்றில் சுழன்று ஆடுகிறது. சில காலங் கழித்துக் கதிர் முற்றிப் பொன்னிறமடைந்து தலை சாய்கிறது. கதிர் முழுவதும் முற்றிய பிறகு அடியோடு தலைசாய்ந்து விடுகிறது. நெல்வயல் காட்சியைப் பலருங் கண்டிருக்கிறோம். கண்டவர்களில் சிலர், வயல் காட்சியின் இயற்கை இன்பத்தைக் கண்டு மகிழ்ந்தும் இருப்பார்கள். பச்சைப் பசேல் என்று இருக்கும் இளம்