உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-13

மாந்தரின் இறைஞ்சி' நிற்பதும் ஆகிய உவமேயக் கருத்துக்களை எவ்வாறு அமைத்துக் காட்ட இயலும்? இயலாதன்றோ? கவிதைக்கே யுரிய இயல்பு அல்லவா?

யார்க்கும் இனியவர்....?:

இன்னொரு சொல்லோவியத்தைப் பார்ப்போம். அழகான குளம். அதில் தாமரைக் கொடிகளும் ஆம்பற் கொடிகளும் செழித்துப் படர்ந்திருக்கின்றன. மாலை நேரம். சூரியன் சாய்ந்து மறைந்துவிட்டது. குளத்திலே மலர்ந்திருந்த தாமரைப் பூக்கள் மெல்ல இதழ்களை மூடிக் குவிகின்றன. சூரியன் மறைந்த பிறகு வானத்திலே வெண்ணிலா பால்போலக் காயத் தொடங்குகிறது. அப்போது குளத்தில் இருக்கும் ஆம்பல் மொட்டுகள் மெல்ல இதழ்களை விரித்து மலர்கின்றன. மலர்ந்திருந்த தாமரைப் பூக்கள் மறைந்த பிறகு கூம்புவதும், மலரா திருத்த ஆம்பல் மொட்டுக்கள் மாலை நேரத்தில் இதழ் விரித்து மலர்வதும் இயற்கையில் நிகழ்கிற காட்சிகளே. ஆனால், இந்த இயற்கைக் காட்சிகளைக் கண்ட தோலாமொழித் தேவருக்கு உலகியல் வழக்கம் ஒன்று புலப்படுகிறது. அவர், குளத்தில் உள்ள நீர்ப் பூக்களில் தாம்கண்ட இயற்கையையும் உலகத்தில் தாம்கண்ட செயலையும் இணைத்துப் பொருத்தி ஓர் சொல்லோவியம் புனைந்து தருகிறார் தம்முடைய சூளாமணிக் காவியத்தில்.

“அங்கொளி விசும்பில் தோன்றும் அந்திவான் அகட்டுக் கொண்ட

திங்களங் குழவிப் பால்வாய்த்

தீங்கதிர் அமுதம் மாந்தித்

தங்கொளி விரிந்த ஆம்பல்,

தாமரை குவிந்த ஆங்கே,

எங்குளார் உலகில் யார்க்கும்

ஒருவராய் இனிய நீரார்?”

இந்தச் சொல்லோவியத்தில், நிலாவெளிச்சத்தைக் கண்டு ஆம்பல் மலர்வதும் தாமரை கூம்புவதுங் கூறப்படுகின்றன. இதுபோலவே, நல்ல இனியவர்களைக் கண்டு சிலர் மகிழ்வதும் சிலர் வெறுப்பதும் ஆகிய உலகியல் உண்மையும் இச் செய்யுளில் பொருத்திக் கூறப்படுகின்றன. காவியப் புலவரின் இந்தச் சொல்லோ வியக் கருத்தை ஓவியக் கலைஞர் ஓரளவுதான் (தாமரைக் குளத்தை