உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

257

மட்டுந்தான்) ஓவியம் எழுதிக் காட்ட முடியும். இச் செய்யுளின் முழுக் கருத்தையும் எழுதிக் காட்ட இயலாது. தாமரைக் குளத்தையும் அதனுள் மலர்ந்துங் கூம்பியுங் கிடக்கிற ஆம்பல்மலர் தாமரை மலர்களையும் விண்ணில் வெண்ணிலாவையும் ஓவியர் சித்திரமாக எழுதிக் காட்ட இயலும். ஆனால், ‘எங்குளார் உலகில் யார்க்கும் ஒருவராய் இனிய நீரா?” என்னும் காவியப் புலவரின் கருத்தை ஓவியக் கலைஞர் எழுதிக் காட்ட இயலுமோ? இது காவியப் புலவருக்கே யுரிய தனிச் சிறப்பன்றோ?

சிறுவெள்ளாம்பல் சிரித்தது:

இதே தாமரைக் குளக் காட்சியை இன்னொரு வகையாகக் கூறுகிறார் காவியப் புலவரான தோலாமொழித் தேவர். குளத்தில் மலர்ந்திருந்த தாமரை-மலர்கள் சூரியன் மறைந்த பிறகு குவிந்து விடுகின்றன. அதனைக் கண்டு சிரிப்பதுபோலச் சிறிய வெள்ளாம்பல் மலர்கள் இதழ் விரித்து மலர்கின்றன. இது, காதலரைப் பிரிந்த கற்புடைமகளிர் மனம் வருந்தி முகம் வாடுவது போலவும் அவர்களைக் கண்டு சிறுமணம் படைத்தோர் சிரித்து மகிழ்வது போலவும் இருக்கிறது என்று காவியப் புலவர் கூறுகிறார்:

66

“காதலர் அகன்ற போழ்தில் கற்புடை மகளிர் போலப்

போதெலாங் குவிந்த பொய்கைத் தாமரை பொலிவு நீங்க மீதுலாந் திகிரி வெய்யோன் மறைதலும், சிறுவெள் ளாம்பல் தாதெலாம் மலர நக்குத் தம்மையே மிகுத்த வன்றே.

சூளாமணி, கல்யாணச்சருக்கம் -203)

இக் கருத்தைச் செய்யுளிலே யமைத்துக் கூற இயலுமே யல்லாமல், ஓவியத்தில் தீட்டிக் காட்ட முடியாதன்றோ? இது கவிதைக்கேயுள்ள தனிச்சிறப்பு.

மணமில்லாக் கோங்கும் குணமில்லாச் செல்வரும்:

தோலாமொழித் தேவர் தம்முடைய சூளாமணிக் காவியத்தில், பூஞ்சோலையில் பூத்த கோங்கிலவ மலர்களைக் காட்டுகிறார். அதிலும் ஒரு சிறந்த உலகியல் உண்மையைக் கூறுகிறார்.

வேனிற்காலம் வந்துவிட்டது. அரசனுடைய பூஞ்சோலையில் செடிகளும் கொடிகளும் மரங்களும் பூத்திருக்கின்றன. கோங்கிலவ மரங்களிலே கோங்கு மலர்கள் மிக அழகாகப் பூத்துச் சிறப்பாக இருக்கின்றன. இவற்றையெல்லாங் கண்ட வயந்த திலகை என்னும்