உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

மத்து என்னும் ஓசையினால் மத்தளம் என்னும் பெயர் உண்டாயிற்று. சல்லென்னும் ஓசையை யுடையதனால் சல்லிகை என்னும் பெயர் பெற்றது. கரடி கத்தினாற் போலும் ஓசையுடைமையால் கரடிகை என்னும் பெயர் பெற்றது.

இடக்கைக்கு ஆவஞ்சி என்றும் குடுக்கை என்றும் வேறு பெயர்கள் உண்டு. இடக்கையால் வாசிக்கப்படுதலின் இடக்கை என்றும், ஆவின் (பசுவின்) உடைய வஞ்சித் தோலினால் போர்க்கப் பட்டதாகலின் ஆவஞ்சி என்றும், குடுக்கையாக அடைத்தலால் குடுக்கை என்றும் காரணப் பெயர்கள் உண்டாயின.

மத்தளம்: இதற்குத் தண்ணுமை என்றும் மிருதங்கம் என்றும் பெயர்கள் உள்ளன. மத்து ஒன்பது ஓசைப் பெயர். தளம் என்பது இசையிடனாகிய கருவிகளுக்கெல்லாம் தளமாக இருப்பது. ஆதலால் மத்தளம் என்று பெயர் பெற்றது. இசைப் பாட்டிற்கு மட்டும் அல்லாமல் கூத்து நடனம் முதலிய ஆடல்களுக்கும் இது இன்றியமையாதது. ஆகவே, இசைக் கருவிகளில் இது முதன்மை யானது.

இடக்கை: இசைப் பாட்டிற்குப் பக்கவாத்தியமாக உபயோகப் பட்டது இக்கருவி.

குடமுழா. மேலே கூறப்பட்ட தோல் கருவிகளில் ஒன்றாக இது கூறப்பட்டது. குடமுழவாகிய கடம் (குடம்) தோல்கருவி யன்று. வி ஆகவே, தோல் கருவிகளில் ஒன்றாகக் கூறப்படுகிற குடமுழா என்பது, பஞ்சமுக வாத்தியம் என்று இப்போது பெயர் கூறப்படுகிற இசைக்கருவியாகும். இது இப்போது இசைப்பாட்டில் வாசிக்கப்படாமல் மறைந்து வருகிறது.

தவுல்: இது நாகசுரத்துடன் வாசிக்கப்படுகிற தோல் கருவி.

தபலா: இது வடநாட்டுத் தோல் கருவி.

துளைக்கருவிகள்: புல்லாங்குழல், நாகசுரம், முகவீணை மகுடி, தாரை, கொம்பு, எக்காளை முதலியன. இவை மரத்தினாலும் உலோகத்தினாலும் செய்யப்படுவன. சங்கு இயற்கையாக உண்டாவது.

குழல்: இதற்கு வங்கியம் என்றும் புல்லாங்குழல் என்றும் பெயர்கள் உண்டு. மூங்கிலினால் செய்யப்படுவது பற்றிப் புல்லாங் குழல் என்னும் பெயர் உண்டாயிற்று. சந்தனம் செங்காலி கருங்காலி என்னும் மரங்களினாலும் வெண்கலத்தினாலும் செய்யப்படுவதும்