உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

45

உண்டு. மூங்கிலினால் செய்யப்படுவது சிறந்தது. துளைக் கருவிகளில் மிகப் பழைமையானதும் சிறந்ததும் இதுவே. “குழல் இனிது யாழ் இனிது” என்று திருவள்ளுவர் கூறுகிறபடியினாலே இதன் பழைமை நன்கு அறியப்படும்.

இதன் பிண்டி இலக்கணம், துளையளவு இலக்கணம், துளை களில் இசை பிறக்கிற இலக்கணம் முதலியவற்றை அடியார்க்கு நல்லார் உரையில் காண்க.20

இது முற்காலத்தில் இசைப்பாட்டிற்கும், நாட்டியம் நடனங் களுக்கும் பக்கவாத்தியமாகப் பெரிதும் வழங்கி வந்தது. இக்காலத்தில் இவ்வினிய இசைக்கருவி தனியே தனியிசையாகப் பக்கவாத்தியங் களுடன் வாசிக்கப்படுகிறது.

நாகசுரம்: இது மிகப் பிற்காலத்தில் உண்டான இசைக்கருவி எனத் தோன்றுகிறது. இது மரத்தினாலும் வெண்கலம் முதலிய உலோகத்தினாலும் செய்யப்பட்ட துளைக்கருவி. சங்ககாலத்து நூல்களிலும் இடைக்காலத்து நூல்களிலும் இக்கருவி கூறப்பட வில்லை. கோயில்களில் இசைக்கருவி வாசிப்போருக்கு மானியம் அளிக்கப்பட்ட செய்திகளைக் கூறுகிற சோழ, பாண்டிய அரசர் சாசனங்களிலும் இக்கருவி கூறப்படவில்லை. எனவே, இது பிற்காலத்தில் உண்டாக்கப்பட்ட இசைக்கருவி என்பதில் ஐயமில்லை. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பரதசங்கிரகம் என்னும் நூலில் இது கூறப்படுகிறது.

66

“பூரிகை நாகசுரம் பொற்சின்னம் எக்காளை

தாரை நவரிசங்கு வாய்வீணை-வீரியஞ்சேர் கொம்பு தித்தி காளை குழலுடன் ஈராறும் இன்பார் துளைக்கருவி என்.

என்று ஒரு வெண்பா அந்நூலில் காணப்படுகிறது. இதில் தான் முதல் முதலாக நாகசுரத்தின் பெயர் கூறப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகூர், நாகப்பட்டினம் முதலிய இடங்களில் இருந்த நாகர் என்னும் தமிழினத்தைச் சேர்ந்தவர்களால் இக் கருவி உண்டாக்கப்பட்டது என்றும் அதனால் இதற்கு நாகசுரம் என்னும் பெயர் ஏற்பட்டதென்றும் கூறுகிறார்கள்.