உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

இருக்கு முதலிய வேதத்திலிருந்து இது உண்டாயிற்று என்று சிலர் கதை கட்டிவிடுவது அறியாமையாகும்.

பிற்காலத்தில் உண்டானதானாலும் நாகசுரம் சிறந்த இனிய இசைக் கருவியாகும். இதன் இன்னிசையில் உருகாதார் யார்? இதற்குப் பக்கவாத்தியமாக அமைவது தவுல் என்னும் தோற்கருவி. இதுவும் புதிதாக உண்டானதே.

தாரை கொம்பு எக்காளை முதலிய துளைக்கருவிகள் இசைப் பாட்டிற்கு ஏற்றவையல்ல. சங்கு மங்கல இசைக் கரு சைக் கருவியாகக் கருதப்படுவது. அது கோயில்களிலும் வீடுகளிலும் மங்கல நாட்களில் ஊதப்படுகிறது.

கிளார்னெட்: பிடிலைப் போன்று இதுவும் ஐரோப்பிய இசைக் கருவி, Clarionet என்று இதனை ஆங்கிலத்தில் கூறுவர். துளைக் கருவியைச் சேர்ந்தது. இதனை நமது நாட்டு இசைக் கருவியாக முதன் முதல் உபயோகித்தவர் வித்துவான் சின்னையா பிள்ளை அவர்கள். இவர், மேல் நாட்டுப் பிடிலை நமது நாட்டு இசைக் கருவியாக அமைத்துக் கொடுத்த வித்துவான் வடிவேலு பிள்ளையின் உடன் பிறந்தவர். அவரைப் போலவே சின்னையா பிள்ளையும் தஞ்சாவூர் அரண்மனையில் இசைப் புலவராக இருந்தவர். தஞ்சாவூர் அரண் மனையில் இங்கிலிஷ் பாண்டு வாசித்தபோது அதனுடன் வாசிக்கப் பட்ட கிளார்னெட் கருவியைக் பற்றி இவர் ஆராய்ந்து பார்த்து அதனைக் கற்று நமது நாட்டு இசைக் கருவியாக உபயோகப் படுத்தினார். பரதநாட்டியத்துக்கு உபயோகப்பட்ட முகவீணை என்னும் நாணற் குழாய்க் கருவிக்குப் பதிலாகக் கிளார்னெட் பயன்படுகிறது. அன்றியும், பிடிலைப் போலவும் புல்லாங்குழலைப் போலவும் இக் கருவியைத் தனி இசைக் கருவியாகவும் வாசித்து வருகிறார்கள்.

நரம்புக்கருவிகள்: மரத்தினால் செய்யப்பட்டு நரம்புகள் அல்லது கம்பிகள் பூட்டப்பட்டவை, யாழ், வீணை, தம்பூரா, கோட்டு வாத்தியம், பிடில் முதலிய நரம்புக் கருவிகளாம்.

யாழ்: இது மிகப் பழமையான இசைக் கருவி. உலகத்திலே பல நாடுகளில் ஆதிகாலத்தில் வழங்கிவந்தது. ஒரு காலத்தில் இந்தியா தேசம் முழுவதும் இக்கருவி வழங்கிவந்தது. வடஇந்தியாவில் யாழ்க் கருவி வழக்கிழந்த பிறகும் தமிழ்நாட்டிலே நெடுங்கால மாகப்