உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

கஞ்சக் கருவிகள்: இவை வெண்கலத்தால் செய்யப்படுவன. தாளம், குண்டுதாளம், பிரமதாளம், ஜாலர் முதலியன.

கடம்: குடம் என்றும் பானை என்றும் பெயர். இது மண்ணால் செய்யப்பட்டது. பழைய இசைக் கருவிகளில் ஒன்று. குடம் வேறு, குடமுழா வேறு. குடமுழா என்பது பஞ்ச முகவாத்தியம்.

சிற்பிகள் சிலர், தமது சிற்பக் கலைகளிலேயும் இசையை அமைத்து இருக்கிறார்கள். இது சிற்பிகளின் திறமையைக் காட்டு கிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொட்டைக் கோபுரம் எனப்படும் வடக்குக் கோபுரத்தருகில் உள்ள ஐந்து தூண்கள் இசை ஒலிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன. கருங்கல் பாறையில் அமைந்த இந்தத் தூண்களில் 22 மெல்லிய கம்பங்களைச் சிற்பிகள் அமைத்திருக் கிறார்கள். இம் மெல்லிய கம்பங்களைக் கம்பியினால் தட்டினால் இசைகள் உண்டாகின்றன.

புதுக்கோட்டையைச் சேர்ந்த அன்னவாசல் என்னும் ஊரில் ஒரு ஜைன உருவம் கருங்கல்லில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விக்கிரகத்தைத் தட்டினால் இனிய இசை உண்டாகிறது. அளவுக்கு அதிகமாகத் தட்டித்தட்டி மக்கள் இந்த உருவத்தைச் சிறிது உடைத்து விட்டார்கள்.

சிற்பிகள் தமது வன்மையினாலே கருங்கல்லில் அமைத்த வேறு சில பொருள்களும் உள்ளன.

பதினோரு ஆடல்

இசைக் கலையுடன் தொடர்புடையது ஆடல் கலை, ஆடல் கலை, இசைக் கலையைப் போலவே பழைமை வாய்ந்தது. வாயினால் பாடப்பட்ட இசைப்பாட்டுக்குச் செந்துறைப் பாட்டு என்றும், டல்கலைக் குரிய பாட்டுக்கு வெண்டுறைப் பாட்டு என்றும் பெயர் உண்டு.

பண்டைக் காலத்தில் ஆடப்பட்டு இப்போது மறைந்து போன ஆடல்களைப்பற்றிக் கூறுவோம்.

வ்

பண்டைக் காலத்திலே பதினோரு வகையான ஆடல்களை ஆடி வந்தார்கள். இவ் வாடல்களைக் கூத்து என்றும் கூறுவதுண்டு. இவ் வாடல்கள், தெய்வங்களின் பெயரால் ஆடப்பட்டபடியால்,