உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை - ஓவியம் - அணிகலன்கள் - - 49

கோட்டு வாத்தியம்: இது பிற்காலத்தில் உண்டானது. ஆனால், வீணை போன்று அவ்வளவு சிறந்ததல்ல. வீணைக்கு இரண்டாவ தாகவே இது கருதப்படுகிறது.

தம்பூரா: இது சுருதிக்குப் பயன்படுகிறது.

பிடில்: இது மேல்நாட்டு இசைக் கருவி. வயலின் (Violin) என்றும் பிடில் (Fiddle) என்றும் ஆங்கிலத்தில் கூறுவர். இப்போது இது நமது நாட்டு இசைக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பிய சைக் கருவியாகிய இதனை, நம் நாட்டு இசைக் கருவியாக முதன் முதல் அமைத்தவர் வித்துவான் வடிவேலு பிள்ளை அவர்கள். இவர் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர். தலைக்கோல் ஆசான் (நட்டுவர்) ஆகிய இவர், தஞ்சாவூர் சமஸ்தானத்தில் அரண்மனை வித்துவானாக இருந்தார். ஒரு சமயம் அரண்மனையில் இங்கிலீஷ் பாண்டு வாசிக்கப்பட்ட போது அதனுடன் பிடிலும் வாசிக்கப்பட்டதை இவர் ஊன்றிக் கவனித்தார். பிறகு, பிடிலைத் தமிழ் இசைக்குப் பயன்படுத்தலாம் என்று கண்டார். ஆகவே அதனைக் கற்று அதை வாசிப்பதில் நிபுணர் ஆனார். இக்கருவியை நமது நாட்டு இசைப் பாட்டிற்குத் துணைக் கருவியாக்கினார். திருவாங்கூர் அரசரும், இசையில் வல்லவருமான சுவாதி திருநாள் மகாராஜா அவர்கள், வித்துவான் வடிவேலுப் பிள்ளை அவர்களின் பிடில் வாசிக்கும் திறமையை மெச்சிப் புகழ்ந்து, அவருக்குத் தந்தத்தினால் செய்யப்பட்ட பிடில் ஒன்றை 1834-ஆம் ஆண்டில் பரிசாக வழங்கினார். ஐரோப்பிய இசைக் கருவியாகிய பிடிலை, நமது நாட்டு இசைக் கருவியாக்கித் தந்த வித்துவான் வடிவேலு பிள்ளை அவர்களுக்கு, தமிழ் உலகம் என்றும் கடமைப் பட்டிருக்கிறது. இப்போது இது பெரிதும் வழங்கப்படுகிறது. இக் காலத்தில் பிடில், வாய்ப்பாட்டிற்கு இன்றி யமையாத இசைக் கருவியாக விளங்குகிறது. அன்றியும் புல்லாங்குழலைப் போலத் தனி இசைக் கருவியாகவும் வாசிக்கப்படுகிறது. இது சிறந்த இசைக் கருவியாகும்.

h

(மேல் நாட்டு பிடிலை நமது இசைக் கருவியாக்கிக் கொண்டது போலவே, மேல்நாட்டு பேண்டு (Band) என்னும் இசையையும் நமது நாட்டு இசையாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.)