உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

முகக் குறிப்பு

முத்திரைகளைப்போலவே

பரத நாட்டியத்திற்குக் கை

முகத்தினாலும், கண்ணினாலும், புருவத்தாலும், காலாலும் குறிப்புகளைக் காட்டுவது உண்டு. இவற்றில், முகத்தின் (தலையின் குறிப்பு வகைகளைக் கூறுவோம்.

1 அஞ்சிதம், 2 அதோமுகம், 3 ஆகம்பிதம், 4 பிரகம்பிதம், 5 ஆலோவிதம், 6 உலோலிதம், 7 உத்துவாசிதம், 8 சமம், 9 சௌந்தரம், 10 துதம், 11 விதுதம், 12 பராவிருத்தம், 13 பரிவாகிதம், 14 திரச்சீனம்.

அஞ்சிதமுகம் என்பது, வருத்தம் பொறுக்காமல் இரண்டு தோள்களின்மேலும் தலை சாய்த்தல்.

அதோமுகம் என்பது, தலைகுனிந்து பார்த்தல்.

ஆகம்பிதம் என்பது, சம்மதத்தைத் தெரிவிப்பதற்காக மேல் கீழாகத் தலையாட்டல்.

பிரகம்பிதம் என்பது, வியப்பு பாட்டு பிரபந்தம் என்னும் பொருள் உள்ளதாகத் தலையை முன்னும் பக்கத்தும் அசைத்தல்.

ஆலோலிதம் என்பது, ஆசையால் மலர்ந்த முகத்தோடு ஒருவரைத் தலையசைத்து அழைத்தல்.

உலோலித முகம் என்பது, சிந்தனையோடு ஒரு தோள்மேல் தலைசாய்த்தல்.

உத்துவாசித முகமாவது, தலையை யண்ணாந்து பார்த்தல். சமமுகமாவது, தியானிப்பதுபோல தலையசையாதிருத்தல். சௌந்தர முகமாவது, மகிழ்ச்சியோடு மலர்ந்த முகங்காட்டல். துதமுகமாவது, வேண்டாம் என்பதற்கு இடம் வலமாகத்

தலையாட்டல்.

விதுதமுகம் என்பது, உணவு அணி முதலியவற்றை வேண்டாம் என்பதற்குத் தலையை நடுக்கல்.

பராவிருத்த முகமாவது, வேண்டாததற்கு முகந்திருப்பல்.