உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

65

பரிவாகித முகம் என்பது, இறுமாப்புடன் ஒருபுறஞ்சாய்ந்த தலையைச் சிறிதாய்ச் சுற்றி யாட்டல்.

திரச்சீன முகம் என்பது நாணத்தோடு தலையாட்டல்.

பரதநாட்டியத்தைப் பற்றிய ஏனைய செய்திகளையும் அலாரிப்பு, ஜெதிசுரம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா முதலியவைகளைப் பற்றியும் விரிந்த நூலில் கண்டுகொள்க. தாண்டவத்தைப் பற்றியும் அதற்குரிய நூல்களில் கண்டு கொள்க.

தலைக்கோல்

இந்திரன் மகன் சயந்தன் என்பவனை, ஆடல்பாடல்களுக்குத் தெய்வமாகத் தமிழர் பண்டைக்காலத்தில் கொண்டிருந்தனர் என்பது தெரிகிறது. ஆடல்பாடல்களின் தெய்வமாகிய சயந்த குமாரனுக்கு அறிகுறியாகத் தலைக்கோல் என்னும் கோலைப் போற்றினார்கள். தலைக்கோல் என்பது ஏழுசாண் நீளமுள்ள மூங்கிலினால் அமைந்த கோல். இம் மூங்கில் கழியின் கணுக்கள்தோறும் நவரத்தினங்கள் இழைக்கப்பட்டு இடையிடையே பொற்கட்டு இடப்பட்டிருக்கும். இத்தலைக்கோலுக்கு அரண்மனையிலும் ஆடல் அரங்கத்திலும் தனியிடம் உண்டு.

66

'புண்ணியமால் வெற்பில் பொருந்து கழைகொண்டு

கண்ணிடைக் கண்சாண் கனஞ்சாரும்-எண்ணிய நீளமெழு சாண்கொண்டு நீராட்டி நன்மைபுனை நாளிற் றலைக் கோலை நாட்டு

என்பது பரத சேனாபதியம்.

போர்க்களத்திலே தோற்ற அரசனுடைய வெண்கொற்றக் குடையின் காம்பைக் கொண்டுவந்து அதனால் தலைக்கோல் அமைப்பதும் உண்டு.

தலைக்கோல் சிறப்பு

காவிரிப்பூம் பட்டினத்திலே சோழனுடைய அரண்மனையிலே தலைக்கோலுக்குரிய இடம் இருந்தது. அந்தக் காலத்திலே, இந்திரவிழா நடைபெற்ற இருபத்தெட்டு நாளிலும் இசையரங்கத்திலே ஆடல்பாடல்கள் நிகழ்ந்தன. அவ்விழாவின் தொடக்கத்தில், மேளதாளத்துடன் தலைக்கோலுக்குப் பூசனை முதலிய சிறப்புச்